பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம, இனப் பெயர்கள் -15

என்னும் பெயர்களும் உண்டு. மிலேச்சர் உண்ணும் அரிசி யாதலின் இப்பெயர்கள் பெற்றது. சாகம் என்பது மரக்கறி உணவைக் குறிக்கிறது. மிலேச்சர் என்றால், நாகரிகமற்ற பிற நாட்டினர், திருத்தமின்றி மொழி பேசுபவர் என்னும் பொருட் குறிப்பு சீவக சிந்தாமணியில் உள்ளது:

'கொன்னுனைக் குந்தமும் சிலையும் கூர்நுதி மின்னிலை வாளொடு மிலேச்சர் ஏறலின் பொன்னரிப் புட்டிலும் தாரும் பொங்குபு முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே”.

— (2216) ஈண்டு மிலேச்சர் என்பது, நாகரிகம் அற்ற பிற நாட்டு முரடர் என்னும் பொருளில் உள்ளது.

"இட்டவெண் ணிலப்படா வகையின் ஈண்டிய

முட்டிலா மூவறு பாடை மாக்களால் புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய மட்டிலா வளநகர் வண்ணம் இன்னதே. (93)

என்னும் சீவகசிந்தாமணிப் பாடலில் உள்ள மாக்கள்’ என்னும் சொல்லுக்கு, 'மிலேச்ச ராதலின் ஐயறிவிற்கு உரிய மாக்கள்’ என்னும் பெயரால் கூறினார்’ என நச்சினார்க்கினியரும், மிலேச்சர்” என்பதற்கு, 'இலக்கணத் திருத்தம் இல்லாத சொற்களைச் சொல்லுவோர்' - என உ. வே. சாமிநாத ஐயரும், பொருள் வரைந்துள்ளனர்.

திவாகர நிகண்டு ஆரியரை மிலேச்சர் எனக் கூறுகிறது.

'மிலேச்சர் ஆரியர்' - நூற்பா - 2-31.

பிற்காலத்தில் எழுந்த சூடாமணி நிகண்டு ஆரியர் அல்லாதவர் மிலைச்சர்-மிலேச்சர் ஆவார் எனத் திவாகரத் திற்கு மாறாகக் கூறியுள்ளது: