பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மர இனப் பெயர்கள்

அறிவியலின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று - என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கலை, தொடக்கத்தில், மருந்து செய்து அதனால் உடல்நலம் பேணித் தெய்வ நலம் பெறுதற்காகச் சித்தர்களால் கையாளப்பட்டு வந்ததாம். பின்னர், உலோக மாற்று செய்து பொருள் ஈட்டும் அளவுக்கு வந்துவிட்டது.

இந்தப் பொன் மாற்று வேலையைச் செய்யச் சில மர இனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அயம், இரும்பு, எஃகு, ஈயம், காரீயம், துத்தநாகம், உப்பு, கல்லுப்பு, நவச்சாரம், காயம், காவிக்கல், இரசம், மனோசிலை, காந்தம், கந்தகம், செம்பு, தங்கம் முதலிய ஒன்பது உலோகங்களையும் - உலோகஞ் சார்ந்த அல்லது உலோகம் போன்ற பொருள் களையும் திரித்தும் மாற்றியும் பொடித்தும் பயன் உண்டாக் குகிற சில மர இனங்களின் பட்டியல் வருமாறு: கீழ் வருவனவற்றுள் இரும்பைத் தங்கமாக்கி தவிர, மற்றவை சா.சி.பி. அகர முதலியில் உள்ளன.

அயத்துக்கு உருக்கி = இரத்த மண்டலப் பூண்டு அயத்தை ஈயமாக்கி = iழிச் செடி அயம் உருக்கி = காட்டா மணக்கு (செடி வகை) இரசம் தாக்கும் மூலிகை = பெரிய முள்ளங்கி (செடி) இரும்பு அறுப்பி = கல்லி இரும்பிலை இரும்பு நீற்றி (இரும்பைப் பொடியாக்குவது) = எருக்கிலை இரும்பைத் தங்கமாக்கி = இரும்பிலிச் செடி (மலையகராதி) ஈயங் கட்டி = இரும்பிலி இலை ஈயங் கொல்லி = கரிய போளப் பூடு ஈயத்தை நாச மாக்கி = கொடிக்கள்ளி (செடிவகை) ஈயத்தைப் பற்ப மாக்கி = ஆராக்கீரை ஈயமாக்கி - காட்டாமணக்கு (செடிவகை)