பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாம்பசிவம் பிள்ளையின் அகரமுதலியில் உள்ள பல்வேறு வகைப் பெயர்கள்

அகண்ட பூண்டு

கண்டம் என்பது பிரிக்கப்பட்ட இடப்பகுதி; அகண்டம் என்பது எல்லா இடத்தையும் குறிக்கும். வல்லாரை, நீர்க் கரை - தோட்டம் முதலிய பல இடங்களிலும் இருக்கக் கூடியதாதலால் அகண்ட பூண்டு எனப்பட்டது. வெளியிடங் களில் இருந்தால் போதாது; வீட்டிலும் வல்லாரையை வளர்க்க வேண்டும் - எனத் தேரையர் குண பாடநூல் கூறுகிறது. .

‘' எல்லாரையும் அருந்தென் றேயுரைத்து நன்மனையுள்

வல்லாரையை வளர்த்து வை’

என்பது பாடல் பகுதி. இடத்தால் - சார்பால் பெற்ற பெயர் இது. . அக்கினிச் சருமன்

சருமம் = மேல்தோல்; மஞ்சளின் மேல்தோல் அக்கினி (நெருப்பு) போன்ற நிறத்துடன் இருக்குமாதலின், மஞ்சள் அக்கினிச் சருமன் எனப்பட்டது. இது வடிவால் வந்த பெயர்.

அக்கினி சாந்தம்

ஓமம், உடம்பின் வெப்பத்தைச் சாந்தப்படுத்திச் சம நிலையில் வைத்திருக்குமாதலின் அக்கினி சாந்தம் எனப் பயன் காரணமான பெயர் பெற்றுள்ளது.