பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 19

அக்கினி சிகை

குங்குமப்பூ, அக்கினிச் சிகைபோல் (நெருப்புக் கொழுந்து போல்) தோற்றத்தில் காணப்படுவதாலும், அக்கினிபோல் செம்மஞ்சள் நிறம் உடைமையாலும் 'அக்கினி சிகை எனப் பெயர் பெற்றது. வடிவால் பெற்ற பெயர். குங்குமப் பூண்டின் மலர்களில் உள்ள மகரந்தத் தாள்களே குங்குமப் பூ எனப்படும்.

அர்ச்சனை யாதி (சா)

கடவுளுக்கு அர்ச்சனை செய்ய உதவுவதால் வில்வத் திற்கு அர்ச்சனை யாதி என்ற பெயர் பயன் காரணமாக வந்தது.

அனாதி (சா)

கோழி முதலா - முட்டை முதலா? விதை முதலா - மரம் முதலா? என்ற வினாவிற்கு விடையிறுப்பது அரிது. ஆனால் விதைக்கு (வித்துக்கு) அனாதி என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. ஆதி என்றால் முதல்; அனாதி என்றால் முதல் இல்லாதது - என்று பொருளாம். இப்பெயர் மரத்தினும் வித்தே முதல் என்று சொல்வதுபோல் தோன்று கிறது. இது தலைமையால் - முதன்மையால் பெற்ற

பெயர்.

அன்னதானக் குருவை (சா)

மூன்று திங்களில் விளையும் இந்நெல் வகை, அன்ன

தானம் - இலவச உணவு அளிப்பதற்குப் பயன்பட்டு

வந்ததால் இப்பெயர் பெற்றது போலும் : பயன்.

அரன்பூசனை மரம் (சா)

சிவன் பூசனைக்குச் செம்மந்தாரை மலர் பயன்படுவ தால், அரன்பூசை மரம் எனப் பெயர் பெற்றது: பயன்.