பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மர இனப் பெயர்கள்

(தணிவு) செய்வதால், இதற்கு அதிக சுர சாந்தினி” எனும் பெயர் அளிக்கப்பட்டது. பயன்.

அதிசாரம் போக்கி

'அதிசாரம் போக்கி’ எனும் பெயர் ஒதியமரத்திற்கு உள்ளது. அதிசாரம் = ஒருவகைப் பேதி நோய். இரத்தப் போக்காகிய பெரும்பாடு நோய்க்கும் ஒதி நல்லதாம்.

புண்புரை கிராணி ரத்தப்போக்கு அதிசாரம் கடுப்பும்

திண்பெறு தாகம் சோபம் சீதளமும் - நண்பில் அதிவிரைவாய்த் தாண்டும் அணங்கே! பருத்த ஒதிமரத்தின் வேருக்கு ஒதுங்கி '.

என்பது அ.கு.பா.பாடல். எனவே, இதற்கு 'அதிசாரம் போக்கி’ எனும் பெயர் பயனால் வந்தது.

அரிப் பிரியை

அரிக்கு - விட்டுணுவுக்கு உகந்ததாதலின், துளசி, அரிப் பிரியை, விட்டுணுப் பிரியை என்னும் பெயர்களைச் சார்பினால் பெற்றது.

ஆகாச கத்தரி (வெண்டை)

வெண்டைக்கு "ஆகாச கத்தரி எனும் பெயர் உளது. கத்தரிக்காய், நுனி நிலத்தை நோக்குமளவில் கீழ்நோக்கித் தொங்கும். வெண்டைக்காயோ, நுனி விண்ணை (ஆகா சத்தை) நோக்குமளவில் மேல்நோக்கி நிற்கும்; அதனால் ஆகாச கத்தரி எனப்பட்டது. வடிவம்.

ஆசைக்கு உரியான்

மருகு என்பது நறுமணம் அளிக்கும் ஒரு பூண்டு வகை; அதனால் இது ஆசைக்கு உரியது; ஆதலின், இது ஆசைக்கு உரியான் எனப்பட்டது. சார்பு.