பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 23

ஆடைக்கு ஆதி

ஆடைக்கு (துணிக்கு) ஆதியாக - முதல் காரணமாக இருப்பது நூல்; நூலுக்கு முதல் காரணமாக இருப்பது பருத்தி; அதனால் பருத்தி ஆடைக்கு ஆதி என்னும் பெயர் பெற்றது. பயன்.

ஆண் உறுப்பு

பூவின் பெண் பாகத்தில், ஆண் உறுப்பாகிய பூந்தாதுமகரந்தப் பொடி (Pollen) சேர்ந்தால்தான் பூ கருவுற்றுக் காய்க்கும். இதனால், பூந்தாது என்னும் மகரந்தப் பொடிக்கு ஆணுறுப்பு’ என்னும் பெயர் அளிக்கப்பட் டுள்ளது. வடிவம்.

ஆதி -

மர இனத்தில் முதலில் (ஆதியில்) வேர் பாய்வதால், வேருக்கு ஆதி எனும் பெயர் உண்டு. தலைமை.

ஆதி மருந்து -

இக்காலத்தில் பலவகையான மருத்துவ முறைகள் உள்ளன. ஆனால் பண்டு நம் நாட்டில், சுக்கு - மிளகு - திப்பிலி என்னும் மூன்று மருந்துகள் பயன்படுத்தப்பட்டன; இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இம்மூன்றின் தொகுப்புப் பெயராக, திரிகடுகம்-முக்கடுகம் எனக் கூறுவதுண்டு. இம் மூன்றின் தொகுப்புக்கும் பொதுவாக ஆதி மருந்து' எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைமை.

ஆயிரங்கண்ணி

பலாப்பழத்தில் கண் போல் மிகப் பல முள் உறுப்பு உள்ளதால், பலா 'ஆயிரங்கண்ணி எனப்பட்டது. வடிவம்.