பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மர இனப் பெயர்கள்

ஆரோக்கியக்காரி

சிறுகீரை உடம்புக்கு வலிமைதந்து நலம் (ஆரோக்கியம்) பயப்பதால் 'ஆரோக்கியக்காரி எனப்பட்டது. பயன்.

ஆரோக்கியமாதர்

அகத்தியும் ஆரோக்கியம் (நலம்)தருதலால், ஆரோக்கிய மாதர் எனப்பட்டது. பயன்.

அவசியம்

சோம்பு என்னும் பெருஞ்சீரகம், வாயுவைப் போக்கி, வயிற்று வலியை நீக்கி, பசியை உண்டாக்கி உடலுக்கு நலம் பயப்பதால், அது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் (கட்டாயம்) இருக்க வேண்டியது. அல்சர்' என்னும் (ஒரு வகை வயிற்றுப்புண்) நோய்க்கு இது மிகவும் ஏற்றது. (வீட்டில் இருப்பதென்ன? இது எப்போதும் என் கைப் பைக்குள் இருக்கும்). இது மிகவும் அவசியம் ஆனதால் 'அவசியம்’ எனப் பெயர் பெற்றது. பயன். ஆனைக்கண்ணன்

அத்திக்காய் ஆனைக்கண் போன்றிருப்பதால் அத்தி 'ஆனைக் கண்ணன்' எனப்பட்டது. வடிவம். ஆனைக்கு அத்தி என்ற பெயரும் உண்டு. இரசகந்தம்

இரசம் = சாறு = நீர். தேங்காய் இளநீர் சுவையாக (ரசமாக) இருத்தலின் தென்னை இரச கந்தம் எனப் பட்டது. பயன்.

இரத்த நதி

தடாகத்தில் அடர்ந்திருக்கும் செங்கழுநீர் மலர்களை

நோக்கின், இரத்த ஆறுபோல் தோன்றுவதால், செங்கழு

நீர் இரத்த நதி எனப்பட்டது. நிறம் வடிவம். ஈண்டு