பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மர இனப் பெயர்கள்

உதிரும் பழம்

இலந்தைப் பழம் எளிதில் உதிரக்கூடியதாதலின் உதிரும் பழம் எனப்பட்டது. செயல்.

உத்தமாதி

முந்திரி மிகவும் உத்தமமான - சிறப்பான பயனைத் தருவதால் 'உத்தமாதி' எனப்பட்டது. முந்திரியைப் பணப் பயிர் என்பர். முந்திரிக் கொட்டைப் பயிரின் சிறப்பு அறிந்ததே. பெயர் தலைமையால் வந்தது.

உமிழ்நீர் பெருக்கி

உட்கொள்வோர்க்கு உமிழ்நீரைப் பெருக்குவதால், கொடிவேலிச் செடி உமிழ்நீர் பெருக்கி எனப்பட்டது. பயன்.

உயர் வண்ணத்தி

கைகளிலும், கால்களிலும், கைவிரல்களிலும், கால் விரல்களிலும் செந்நிறம் ஏற்றுவதற்குப் பெண்கள் மருதாணி இலையை அரைத்து அப்புவது வழக்கம். உயர்ந்த-அழகிய வண்ணத்தைக் (நிறத்தைக்) கொடுப்பதால் மருதாணி உயர் வண்ணத்தியாயிற்று. பயன்.

மருதாணிக்கு உருத்திர கோபம்’ என்னும் பெயரும் உண்டு. உருத்திரன் = சிவன். சிவன் சினந்தால் செந்தீ எழும். மருதாணியும் செந்நிறமாயிருப்பதால் உருத்திர கோபம் எனப்பட்டது. ஒப்புமை-நிறம்.

உயிர் காத்தி

சஞ்சீவி மூலிகை உயிரைக் காப்பாற்றுவதால் உயிர் காத்தி-உயிர் காப்பாற்றி என்னும் பெயர் பெற்றது. சஞ்சீவி மூலிகையால் இறந்தவரும் உயிர்பெற்றெழுந்ததான