பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 29

செய்தியை இராமாயணம் முதலியவற்றால் அறியலாம். பயனால் பெயர் பெற்றது.

உரக கன்னி

உரகம் என்பதற்கு நாகம் என்னும் பொருள் உண்டு.

எனவே, சொல் விளையாட்டாக, நாக மல்லிகை உரக

கன்னி' எனப்பட்டது.

உருமாம்பழம்

மாதுளை உருவத்தால் மாம்பழம் போல் உருண்டு

திரண்டு இருப்பதாலும் ஒரளவு நிறமும் ஒத்திருப்பதாலும் 'உருமாம்பழம் எனப்பட்டது வடிவம்.

உருமாறி மூலி

தொட்டால் வாடி, தொட்டால் சுருங்கி, தொட்டால் சிணுங்கி என இடத்திற்கு ஏற்பப் பல விதமாகப் பெயர் சொல்லப்படும் தொட்டால் சிணுங்கி தொட்டதும் பழைய உருவம் மாறி இலைகள் சுருங்கி மூடிக் கொள்வதால் 'உருமாறி மூலி' எனப்பட்டது வடிவம்.

உலக மாதா

மணத் தக்காளி (சிவப்பு) உலகத்து மக்கட்கெல்லாம் நலம் பயப்பதால், உலக மாதா எனப்பட்டது. தலைமை.

உலக்கைக் கணி

உலக்கை போன்ற நீண்ட தென்னை மரத்தின் உச்சி யில் கனி (காய்) இருப்பதால், தேங்காய் உலக்கைக் கனி எனப்பட்டது. வடிவம்.

உலர்ந்த இஞ்சி

காய வைத்து உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. அதனால் சுக்கு உலர்ந்த இஞ்சி' எனப்பட்டது. வடிவம்.