பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 31

யைத் துரத்திற்றாம், என்பது பழமொழி. வஞ்சி என்பது ஒரு கொடி. வஞ்சிப்பவளும் வஞ்சி. எனவே, வஞ்சி ஒன்றல் காரி என்னும் பெயரை ஒரு சொல் விளையாட்டாகப் பெற்றுள்ளது. -

ஓலைச் சக்கரம்

விசிறிபோல் இருக்கும் தாளிப்பனையை நோக்கின், அதன் மட்டை, ஒலையால் ஆன ஆழி (சக்கரம்) போல் இருப்பது புலனாகும். அதனால் இது ஒலைச் சக்கரம்: எனப்பட்டது. வடிவம், கங்குல் சிறை

கங்குல் = இரவு. சிறை = சிறை வைக்கப்பட்ட அழகிய பெண். சந்திர காந்தி, திங்கள் ஒளி வீசுழ் இரவில் மலுர்ந் திருப்பதாதலால், கங்குல் சிறை என்னும் பெயர் பெற்றது, சார்பு.

கசங்கு கண்ணி

தொட்டால் சிணுங்கி, தொட்டதுமே கசங்கிவிடுமாத லின் கசங்கு கண்ணி எனப்பட்டது வடிவம். கசப்பு

யால், பண்பாகு பெயராகக் கசப்பு' என்னும் பெயர் பெற் றுள்ளன. பண்பு.

கடின பலம்

பலம் = பழம். விளாம்பழம் கடினமான ஒடு உடைமை யால் கடின பலம்’ எனப்பட்டது. வடிவம்.

கண்டால் மயங்கி

கண்டாலேயே மயங்கச் செய்யும் ஒருவகைப் பூடு இப் பெயர் பெற்றுள்ளது. செயல். :: **