பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மர இனப் பெயர்க்ள்

கண்ணழகுக் கொடி

கேந்திர வள்ளி என்னும் கொடி, கண்ணுக்கு அழகாக இருக்கு மாதலின் இப்பெயர் பெற்றது. வடிவம்.

கண்ணனிட மூலி

கண்ணனாகிய திருமாலுக்கு உகந்த மூலிகையாகிய துளசி இப்பெயர் பெற்றது. சார்பு. கண்ணாடிக் கள்ளி

ஒருவகைக் கற்றாழை, காண்பதற்குக் கண்ணாடி போல் பளபளப்பாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. வடிவம்.

கண்ணோவுப் பூண்டு

காந்தளுக்குக் கண்ணோவுப் பூண்டு என்னும் பெயர் பொருட்பண்பு நூலில் தரப்பட்டுள்ளது. இது கண்ணோ வைப் போக்கும் போலும். தோல் நோய்க்கு நல்லதிது. காந்தளுக்குப் பல பெயர்கள் உண்டு. கார்த்திகைத் திங்களில் மலர்வதால் கார்த்திகைப்பூ’; அழகாகத் தோன்றுவதால் தோன்றி'; பூநெருப்பு நிறமாயிருப்பதால் அக்கினிச்சலம்'; கிழங்கு கலப்பை வடிவாயிருத்தலின் கலப்பை'; இலையின் முனை சுருண்டிருப்பதால் 'தலைச்சுருளி'; அந்தச் சுருளால் வேலி முதலியவற்றைப் பற்றி ஏறுவதால் பற்றை' ஏறிப் படர்வதற்கு எதையாவது பற்றிக்கொள்வதால் (கோட லால்) கோடல்-கோடை என்னும் பெயர்கள் காந்தளுக்கு உண்டு. கண்ணோவுப் பூண்டு என்னும் பெயர் தவிர, மற்றவை தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ளன.

கண்வலி போக்கி

கண் வறட்சியாயிருந்தால், நந்தியாவட்டைப் பூவைப் பிழிந்து கண்ணில் இரண்டொரு சொட்டு விடுவார்கள்.