பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ம்ர இனப் பெயர்கள்

கபாலபாணியோன்-கபாலி = சிவனார் வேம்புச்செடி வெப்பம் தருவது; சிவன் பெயரைத் தன் பெயரின் முன்னே கொண்டுள்ளது. வெப்பப் பயன் காரணமாகவும் சொல் விளையாட்டாகவும், இதற்குக் கபாலபாணியோன், கபாலி என்னும் சிவன் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கபாலம் = மண்டையோடு; பாணி = கை. சிவன் மண்டை ஒட்டைக் கையில் உடையவனாதலின் கபாலி, கபாலியோன் என்று அழைக்கப்படுகிறார்.

சிவன் காலனை (எமனை) உதைத்து வென்றவனாத லின், காலனை உதைத்தோன், காலனை வென்றோன் என்ற பெயரும் உண்டு. இப்பெயர்களும் சிவனார் வேம்புக்கு உண்டு.

கரபத்திரம்

கரம் - கை. பத்திரம் என்பதற்கு படைக்கலம்= வாள் என்னும் பொருள் உண்டு. எனவே, கரபத்திரம் என்றால், கைவாள் - கைப்படை என்பது பொருளாகும். சுக்குக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, கைவாளைப் போல் சுக்கு எப்போதும் கையில் (கைவசம்) இருக்க வேண்டிய பொருளாகும். 'சுக்குக்கு மிஞ்சின மருத்துவம் இல்லை - சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வம் இல்லை’ என்பது ஒரு பழமொழி. இதனால் கக்கின் இன்றியமையாச் சிறப்பு அறியவரும். காய்ந்த இஞ்சியாகிய சுக்கு, பலவகை t நோய்கட்கும் பயன்படும் அதனுடன் சேர்க்கப்படும் மிளகு, திப்பிலி, பறங்கிப்பட்டை, அரத்தை, தேன் முதலிய (அனுமானப்) பொருள்கட்கு ஏற்பச் சுக்கு பல நோய்கட்குப் பயன்படும். இதை “All Round Master' எனலாம். சுக்கின் பயனைச் சொல்லிக்கொண்டு வந்த தேரையர், பாடலின் இறுதியில், 'சுக்கு இதற்குப் பயன்படும் - இதற்குப் பயன்