பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மர இனப் பெயர்கள்

கானக விருத்தி: தினை கானகத்தில் விளைவதாலும் கானகத்தாரை வளர்ப்பதாலும் இப்பெயர் பெற்றது. சார்பு.

கானக் குதிரை மேல்தோல் = கானக் குதிரை என் றால் மாமரம். மேல்தோல் என்பது மாமரத்தின் மேலுள்ள

பட்டையைக் குறிக்கிறது. வடிவம்.

கிருஷ்ணப் பிரியம் = கறுப்புக் கொடிமுந்திரி பிரிய மானது - விருப்பமானது. கிருஷ்ணம் = கறுப்பு, எனவே இதற்கு இப்பெயர் நிறத்தாலும் பயனாலும் வந்தது.

கிருஷ்ண மாது = கருந்துளசி. நிறம். துளசிக்குக் கிருஷ்ணா என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணனாகிய திருமாலுக்கு உரியதன்றோ. இது சார்பு.

குகன் = குகன் முருகன். முருகனுக்கு வேலன் என்ற பெயரும் உண்டு. எனவே, வேல மரத்துக்குச் சொல் விளையாட்டாகக் குகன் என்னும் பெயர் தரப்பட்டுள்ளது.

குஞ்சரி = முருகன் மனைவியாகிய தெய்வயானைக்குக் "குஞ்சரி’ என்ற பெயர் உண்டு. குஞ்சரம் = யானை. யானைக்கு அத்தி என்ற பெயரும் உண்டு. எனவே, சொல் விளையாட்டாக அத்தி மரத்துக்குக் குஞ்சரி’ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அத்தி எனும் பெயர் தெய்வ யானைக்கும் சூட்டப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் பாடி யுள்ள திருப்புகழ்ப் பாடல் ஒன்றில்,

“முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை” எனத் தெய்வயானை அத்தி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது காண்க.

பொருள்: முத்தைத் தரு = முத்தின் அழகைத் தரு கின்ற - முத்து போன்ற; பத்தி = வரிசையான, திரு