பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மர இனப் பெயர்கள்

குமரனுட மனைவிமூலம் = குமரனுடைய மனைவி = வள்ளி; மூலம் = கிழங்கு, வள்ளிக்கிழங்கு குமரனுட மனைவி மூலம்’ எனப்பட்டது. இஃதும் சொல் விளை யாட்டே. குமரனுட' என்பதில் உள்ள 'உட' என்பது, மலையாள மொழியில் உடைய' என்னும் ஆறாம் வேற்றுமை உருபுப் பொருளில் வழங்கப்படுகிறது.

குயில் மொழி=அதி மதுரம் குயில் மொழிபோல் இனிப் பானது; தொண்டையில் உள்ள சிக்கல்களைப் போக்குவது. அதன் பெயரே, அதி மதுரம் = மிக்க இனிப்பானது - என இருத்தல் காண்க. அதி மதுரம், காதுக்குக் குயில்மொழி போல் நாக்குக்குத் தித்திக்கும் என்பதற்குச் சான்றாக, தேரையர் பாடலில் உள்ள பாதி அடியை மட்டும் இங்கே காண்போம்:

" தித்திக்கும் அதிமதுரக் குணத்தை யெடுத்

துரைக்கில்.....”

என்ற பாடல் பகுதியாலும், அதிமதுரத்துக்குக் குயில் மொழி என்னும் பெயர் பொருந்தும் என அறியலாம். நாக்குக்குத் தித்திப்பதல்லாமல், தொண்டையை வளப் படுத்துவதால் பாடும் பாடலும் குயில் மொழிபோல் காதுக்குத் தித்திக்கும். ஒப்புமை.

குரங்கிலை: முசு = குரங்கு. முசுமுசுக்கை இலைக்குக் குரங்கிலை என்பது சொல் விளையாட்டாகத் தரப்பட் டுள்ளது.

குரங்கு மூஞ்சிப்பூ = மகிழம்பூ குரங்கு முகம் போன்ற தோற்றம் உடையது. வடிவம்.

குறுக்கன் = கேழ்வரகு மிகவும் குறுகியதாக-சிறியதாக இருத்தலின் இப்பெயர் பெற்றது - வடிவம்,