பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 4|

கூட்டாளி = வெள்ளை வெங்காயம் எனப்படும் பூண்டு, கூட்டாளி (நண்பன்) போல் இருந்து பலவகை நன்மைகளை உடலுக்குச் செய்வது. பயன்.

கூத்தவாதி : தில்லையின் கூத்தாடும் சிவனுக்குக் கூத்தன் எனும் பெயர் உண்டு. கூத்தவாதி எனும் பெயர் சொல் விளையாட்டாகச் சிவனார் வேம்புக்குச் சூட்டப் பட்டது. சிவன் காளியோடு வாதிட்டார்.

கூத்தனம் - கூத்தானம்: சிவன், தில்லையில் - தில்லை மரத்தின் கீழ்க் கூத்தாடுபவன் ஆதலால், கூத்தனம், கூத்தானம் என்னும் பெயர்கள் தில்லை மரத்துக்குத் தரப்பட்டுள்ளன. சார்பு.

கூந்தலழகி = உரோம மரம் (ரோம விருட்சம்) அழகிய கூந்தல் போன்ற பகுதியை உடையது. வடிவம்.

கூவு சுணங்கன் : சுணங்கன் = நாய். நாய்க்குட்டி மரம் இப்பெயரைச் சொல் விளையாட்டாகப் பெற்றுள்ளது. கூவுவது - குலைப்பது நாயின் இயல்பு. இம்மரம் கூவாது.

கூரிய சேகரம் : இது தென்னைமரம். சேகரம்= தலை, உச்சி. மற்ற மரங்களின் உச்சி அகன்று பரந்து விரிந்திருக்கக் காணலாம். ஆனால் தென்னையின் உச்சி கூராக இருக்கும். அதாவது, புது மட்டைகள் வானை நோக்கிக் கூராக நின்று கொண்டிருக்கும். இதனை மணிமேகலையில் உள்ள

"ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற” - (5-126) என்னும் பகுதியாலும் அறியலாம். உயர் மடல் என்பது கூரிய சேகரமாகும். எனவே, தென்னை கூரிய சேகரம்

எனப்பட்டது. வடிவம்.

கூனி: கைகேயின் காவல் தோழி கூனி என்பாள். அவளுக்கு மந்தரை - மந்தாரை என்ற பெயர் உண்டு,