பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மர் இனப் பெயர்கள்

திருநீல கண்டன்: இது சிவன் பெயர். எனவே, இது சிவகரந்தையைக் குறிக்கலாயிற்று, சொல் விளையாட்டு.

திருமால் மூலிகை. துளசி இது. சார்பு.

தீத்தெய்வம்: வன்னி=தீ, சொல் விளையாட்டாக வன்னி மரம் தீத் தெய்வம்' எனப்பட்டது. சிவனுக்கு உரிய தாகிய வன்னி மரத்தை மக்கள் வழிபடுவதும் உண்டு.

துரியோதனன் பூ: துரியோதனனுக்கு நந்தியாவட்டப் பூ உரியதாம். துரியோதனனுக்குச் சுயோதனன் என்ற பெயரும் உண்டு.

' சொன்னநாள் வழுவுறாமல்

சுயோதனன் தோன்றினானே'

(வில்லிபாரதம் - சம்பவ - 78)

இதனால், நந்தியாவட்டப் பூ மாலைக்கு சுயோதனன் மாலை' என்னும் பெயர் பொருட் பண்பு நூலில் தரப் பட்டுள்ளது. எனவே, துரியோதனன் பூ என்பது நந்தியா வட்டப் பூவாகும். சார்பு.

துகிலி: துகில் = துணி, துணி நெய்ய நூல் வேண்டும். நூல் நூற்கப் பருத்தி வேண்டும். பருத்தி துணியாகக் காய்க்கா தல்லவா? ஆகத் துணிக்குப் பருத்தி மூல முதற் காரணமாயிருப்பது பற்றிப் பருத்தியிலை துகிலி எனப் பட்டது. பயன்.

துகில் பீசம்: துகில் = துணி, பீசம் = விதை. துணி தரும் பருத்தி விதை துகில் பீசம் எனப்பட்டது. பயன்.

துப்பு நெல்லி: துப்பு = உணவு, வலிமை. குறள் காண்க :

'துப்பார்க்குத் துப்பாய துப்புஆக்கி துப்பார்க்குத்

துப்பு ஆயது உம் மழை" - (12)