பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் Ši

உணவுக்கு உதவி வலிமை தரும் தோப்பு நெல்லிக்குத் "துப்பு நெல்லி என்னும் பெயர் ஏற்றது. பயன். ஒரு நெல்லிக்கனி இரண்டு ஆப்பிள் பழத்தின் ஆற்றலைத் தருமாம்.

தூய்மை: .ெ வ ள் ைள நிறம் தூய்மையானது. வெள்ளையாய் தூய்மையாய் இருக்கும் பொருளைத் தும்பைப் பூப்போல் உள்ளது என்பர். எனவே, வெண்ணிறத் தும்பை தூய்மை எனப்பட்டது. நிறம் - வடிவம்.

தெட்சணாமூர்த்தி: தெட்சணம்=(தட்சணம்) தெற்கு அகத்தியர் வடக்கேயிருந்து தெற்கே வந்து தென் மலை எனப்படும் பொதிய மலையில் தங்கினார்; தென்தமிழைக் கற்றார்-அதனால் புகழ் பெற்றார்; இவற்றால் தென் முனி எனவும் அழைக்கப்பட்டார். இலக்கியச் சான்றுகள்:

புறப்பொருள் வெண்பாமாலை : 'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவரன்'

(சிறப்புப் பாயிரம்-1,2)

கம்பராமாயணம், 'என்றும் உள. தென்தமிழ் இயம்பிஇசைகொண்டான்' (ஆரணிய காண்டம்-அகத்தியர் படலம்-47-4)

கடம்பவன புராணம்: 'தென்திசை வைகென்று தென்முனிக்குக்

கயிலையின் முன் புகன்ற ஞான்று' -(இலியா-18)

இங்கே தென்முனி, தெட்சணாமூர்த்தி ஆகிய இரண்டும் ஒன்றே. எனவே, அகத்தியரைக் குறிக்கும் தெட்சணா மூர்த்தி என்னும் பெயர் சொல்விளையாட்டாக அகத்தி மரத்திற்கும் உரியதாயிற்று.