பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மர இனப் பெயர்கள்

தெண்டபாணி தெண்டம் = தடி, பாணி = கை; தெண்டபாணி=கையில் உள்ளதடி- கோல். நெல்லி கையில் உள்ளதென நெல்லிக்கும் கைக்கும் முன்னர் தொடர்பு கூறப்பட்டுள்ளது. எனவே, கொடி நெல்லி கைக்கோல் என்னும் பொருளில் தெண்டபாணியாயிற்று. சார்பு.

தேர்வாசம்: அரசர் அந்தக் காலத்தில் தேரில் செல் வது மரபு, அரசின்-அரசரின் வாசமாக-இருப்பிடமாக. ஊர்தியாக உள்ளது தேர். எனவே, அரசு என்னும் மரம், இருபொருள் சொல் விளையாட்டாகத் தேர்வாசம் எனப்

பட்டது.

தேவ பூசைப் பூ அ கடவுள் பூசனைக்கு உரிய செங் கழுநீர்ப்பூ பயன்.

தொட்டக்கால் வாடிய தொட்டால் சிணுங்கி, செயல்இயல்பு.

தோகை முகபூஷணம்: தோகை என்பது, ஈண்டு தோகையையுடைய மயில் போன்ற பெண்ணைக் குறிக் கிறது; தோகை முகம் = பெண் முகம்; பூஷணம் = அணி. பெண் முகத்துக்கு அணி செய்யும் பூசு மஞ்சள்’ இப்பெயர் பெற்றது. பயன்.

தோப்பி=நெல்லியில் பலவகை உண்டு. அரி நெல்லி, கரு நெல்லி, தோப்பு நெல்லி என்பன வகைகள். இவற்றுள், நெல்லிமரம் நிறைந்த தோப்பில் உள்ள நெல்லி தோப்பு நெல்லி எனப்படும். புதுச்சேரியின் (பாண்டிச்சேரியின்) பக்கத்தில் நெல்லித்தோப்பு’ என்னும் பெயருடைய ஊர் ஒன்றுளது. இந்தத் தோப்பு நெல்லி ஊறுகாய் போடப் பட்டு உணவுக்கு உதவும். தோப்பில் உள்ள இந்த நெல்லி தோப்பி எனப்பட்டது. இடம்.