பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மர இனப் பெயர்கள்

இருக்குமிடம் தில்லை. எனவே, தில்லை மரம் நமனை விரட்டி’ எனப்பட்டது. சார்பு.

நயன சஞ்சீவி. நயனம் = கண். தூதுவளை (தூதளை) கண்ணுக்கு மிகவும் நல்லது. இது பற்றிய அ.கு.பா. பாடலும் அதற்கு முருகேச முதலியார் தம் பொருட் பண்பு நூலில் தந்துள்ள உரையும் வருமாறு:

" திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையேல் நல்ல

திருக்குளத்தைப் போலே திருந்தும் - திருக்குளத்தை யெல்லா மிரவுவினை யென்னவரும் தூதுவளை யெல்லா மிரவு மினி' -

உரை: 'துதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறு காய் இவற்றை நாற்பது நாட்கள் புசித்துவரின், கண்ணில் ஏற்பட்ட தீக்குற்ற மிகுதி, மற்ற கண்ணோய்கள் யாவும் நீங்கும்”. பாடல் அமைப்பு மறைபொருளாயுள்ளது. எனவே, தூதுவளை நயன சஞ்சீவி எனப்பட்டது. பயன்.

நயனவல்லி: வல்லாரையும் கண்ணுக்கு நல்லது.

" அக்கநோய் மாறும்; அகலும் வயிற்றிழிவு;

தக்க இரத்தக் கடுப்புத் தானேகும் - பக்கத்தில் எல்லாரையு மருந்தென்றே யுரைத்து நன்மனையுள் வல்லாரை யைவளர்த்து வை” - என்பது அ.கு.பா. பாடல். அக்கம் = கண், அக்கநோய் மாறும் என்றால் கண்ணோய் போகும் என்பது கருத்து. எனவே, வல்லாரை நயனவல்லி யாயிற்று'. பயன்.

நரைதிரை மாறப்பண்ணி இவ்வாறு செய்வது காட்டு மாமரம். பயன்.

நரை நாசனி = விழுதிக் கீரை நரையைப் போக்கும். பயன்,