பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 57

அக்காலத்தில் வேலை செய்தவர்க்குக் கொடுத்த கூலிப் பணமும் - சம்பளப் பணமும் வெட்டி என்று சொல்லப் பட்டிருக்க வேண்டும். இதற்குச் சான்று:- "அவன் வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் சும்மா இருக்கிறான்” என்னும் உலக வழக்குத் தொடராகும். இத்தொடரிலுள்ள வெட்டி’ என்பது ஊதியத்தைக் குறிக்கின்றதல்லவா? எனவே, வெட்டி என்பது நிதியை - செல்வத்தைக் குறித்ததால் வெட்டி வேருக்கு நிதிநாயகன்’ என்னும் பெயர் சொல்

விளையாட்டாக வைக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு சிறப்புடைய தன்றாயினும், ஈண்டு வேறொரு கருத்தும் விளம்பலாம். வெட்டி வேரால் செய்யப்பட்ட விசிறியும் மறைப்புத் தட்டியும், மிக்க மணமும் குளிர்ச்சியும் தரும். இத்தகு விசிறியும், தட்டியும், நிதிக்கு நாயகராக உள்ள செல்வர்களின் விட்டிலேதான் பெரும்பாலும் காணலாம். எனவே, சார்பு பற்றி, வெட்டி வேருக்கு 'நிதி நாயகன்’ என்னும் பெயர் வந்ததாகவும் கூறலாமா!

நின்றால் சிணுங்கி: தொட்டால் சிணுங்கியினும் இது மென்மையானது போலும். ஆள் பக்கத்தில் நின்றாலேயே இது சிணுங்கும் போலும் தொட்டால் சிணுங்கி இலை கீழ் நோக்கி மடியும்; நின்றால் சிணுங்கியின் இலை மேல் நோக்கி நின்ற நிலையில் மடியும். வடிவம்.

நின்றால் மேனி: இது ஒரு பூண்டு. இதன் அருகில் மக்கள் நிற்க, அவர்தம் நிழல் இப்பூண்டின்மேல் பட்டால், இது பொன்னிற மேனியாக மாறித் தோன்றுமாம். வடிவம்.

நீர்க்குடத்தி: தண்ணிர் விட்டான் கொடிக்கு இப் பெயராம். இக்கொடி தண்ணீர் ஈரப்பசையுள்ளதாதலின் இப்பெயர் பெற்றது. இதற்கு நீர் வாளி நாராயணி முதலிய பெயர்களும் உண்டு. நாரம்= நீர், நீர் உடையதுநாரம் உடையது நாராயணி, வடிவம். .