பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மர இனப் பெயர்கள்

நீறணிந்தோன்: திருநீறணிந்தவன் சிவன் ஆதலின் சிவ துளசிக்கு இப்பெயர் சொல் விளையாட்டாகத் தரப் பட்டுள்ளது.

நெடியோன்: நெடியோன் = திருமால். இ.சா.:

சிலப்பதிகாரம்:

' செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’ (11-51) ' நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்'

(8–1) நெடியோன் குன்றம் = திருப்பதி மலை; தொடியோள் பெளவம்= கன்னியாகுமரி). மகாபலியை அடக்கத் திருமால் மண்ணுக்கும் விண்ணுக்குமாக நெடிய உருவங்கொண்டத னால் நெடியோன் எனப்பட்டார். அவருக்கு உரிய துளசி சார்பினால் நெடியோன் எனப்பட்டது.

f நெய்சிக்குப் போக்கி = எண்ணெய் சிக்கைப் போக்கு வது சிகைக்காய். பயன்.

நெருப்பு மரம்: இது தில்லை மரம். இது வெப்பம் தருவது. நெருப்பு வண்ணனாகிய சிவனுக்கு உரியது. எனவே, தில்லை, நெருப்பு மரம் எனப்பட்டது. பண்பு, சார்பு.

நெற்றிக் கண்ணன் = நெற்றிக் கண் உடைய சிவன். இது சிவனார் வேம்பைச் சொல் விளையாட்டாகக் குறிக் கிறது.

நோவு போக்கி: நேர் வாளக் கொட்டையைக் கொண்டு பேதி மருந்து செய்வது நாட்டு மருத்துவ முறை. மருத்துவர்கள் நோயாளிக்கு முதலில் பேதி மருந்து கொடுப்பது வழக்கம். இந்த நேர்வாளப் பேதி மருந்து மலத்தை வெளிப்படுத்தி வயிற்றையும் அதன் வாயிலாக