பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மர இனப் பெயர்கள்

கேழ்வரகு உணவு கொள்வர். அதனால் இது பஞ்சம் தாங்கி என்னும் பெயர் பெற்றது. பயன்.

பஞ்ச பாண்டவர் முல்லை: பஞ்ச பாண்டவர் ஐவர். தொகுதியாக உள்ள ஐந்து பொருளைக் குறிக்கக் குழுஉக் குறியாக - குறிப்பாகப் பஞ்சபாண்டவர் எனல் உண்டு. இதன்படி, ஐந்து இதழ்களை உடைய முல்லை - ஐந்திதழ் முல்லை, 'பஞ்ச பாண்டவர் முல்லை’ எனப்பட்டது. வடிவம்.

பஞ்சாக்கினி: ஐந்து வகை நெருப்புகள் இருப்பதாகக் கூறுவர். சுருக்கமாகப் பஞ்சாக்கினி என்பர். நெருப்பு எரிக் கும் தன்மையது. சீரகம் வயிற்றில் உள்ள கசடுகளை எரித்துப் பசித் தீயைப் பதிலுக்கு வளர்க்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் எரித்து விடுகிறதே" என்று சொல்வது உலக வழக்கு. இதனால் சீரகத்துக்குப் 'போசனக் குடாரி' என்னும் பெயரும் உண்டு. போசனக் குடாரி = உணவு கொள்ளச் செய்யும் படைக் கருவி - கோடாரி. பாடல் சான்று :

தேரன் வெண்பா:

' ராசனையு மீ வென்று நண்பைப் பலப்படுத்தி

போசன குடாரி செயும் போர்” . போசன குடாரியைப் புசிக்கில் நோயெல்லாம் அறும்; காச மிரா தக்காரத்தி லுண்டிட’’.

தேரையர் குணபாடம்: "ஆசன குடாரியெனும் அந்தக் கிரகணியும்

போசன குடாரி யுண்ணப் போம்” .

பத்தியம் முரிச்சான்: நாட்டு மருந்து உண்பவர் அகத்திக் கீரை உண்ணார், அது பத்தியத்தைப் பயனின்றி