பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 6i

முரித்து விடுமாம். வேறு மருந்து கொள்ளவேண்டின், அகத்திக் கீரை உண்டு பத்தியத்தை முரித்துக் கொண்டு பின்பே வேறு மருந்துண்பர். எனவே, அகத்தி பத்திய முரிச்சான்’ - பயன்.

பயித்திய நாசனி மலைமாங்காய் பைத்தியத்தைப் போக்குமாம்; அதனால் மலைமா இப்பெயர் பெற்றது. பயன். -

பரமானுகூலி. பரம + அனுகூலி = பேருதவி புரிவது அரச மரம். இது தெய்வத் தன்மை உடையதாக மக்கள் மதிப்பதால் கோயில் அருகில் வளர்ப்பதுண்டு. அரச மரத் தடியில் பிள்ளையாரை அமர்த்துவது முண்டு. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள், பிள்ளையாரையும் சேர்த்து அரச மரத்தைச் சுற்றி வந்து வணங்குவர். இது பற்றிப் பொருட் பண்பு நூலில் உள்ள பகுதிகள்:

'அரச இலைக் கொழுந்து உடல் வன்மையைப் பெருக்கும்; சுரத்தையும் முக்குற்றத்தையும் போக்கும். அன்றியும், சூலகத் துண்டாம் கோளாறுகளைப் போக்கிச் சூல் (கருப்பம்) அமையச் செய்யும்'.

'அரச மரத்தில் வளரும் புல்லுருவியின் இலையை அரைத்துப் பிள்ளைப் பேறு இல்லாப் பெண்கட்கு எலு மிச்சம் பழம் அளவு மூன்று நாள் சூதகத்திற்கு முன்பு கொடுத்துவரச் சூல் அமையும்'

'அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்பது ஒரு பழமொழி. இது, அரச மரத்தைச் சுற்றினால் அடிவயிற்றில் கருவின்கனம் தெரியும் என்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறது.

மற்றும், அரசமரத் தடியில் ஊர் அவை (கிராம சபை) கூடுவதுண்டு, அந்த அளவுக்கு நிழல் தரும். இப்படியாகப்