பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மர இனப் பெயர்கள்

பல வகையிலும் பரம அனுகூலியாக இருப்பதால் அரசு பரமானுகூலி எனப்பட்டது. பயன்.

பல்கேசரம்=பூவில், மகரந்தப் பொடியுள்ள மகரந்தப் பையிருக்கும் ஆண்பாகம் கேசரம் எனப்படும். தென்னையில் பல கேசரங்கள் இருப்பதால், பல் கேசரம் எனப்பட்டது.

வடிவம்.

பாணி விருக்கம் பாணி - கை; விருக்கம் = மரம். தென்னையின் மட்டைகளுள் கீழ்நோக்கித் தொங்குபவை தொங்கும் கைகள் போலவும், பக்கவாட்டத்தில் நீண்டிருப் பவை நீட்டிய கைகள் போலவும், மேல் நோக்கியவை உயரே தூக்கிய கைகள் போலவும் இருப்பதால், தென்னை பாணி விருக்கம் எனப்பட்டது. வடிவம்.

மற்றும் ஒரு பெயர்க் காரணம்=பாணி = நீர். இது வடநாட்டுச் சொல்தான். தென்னையில் இளநீர் இருப்ப தாலும், முற்றிய தேங்காயின் இனிய நீரும் பருகப் பயன் படுவதாலும், இம்மரம் "பாணி விருக்கம்’ எனப்பட்டது எனலாம். பயன்.

பாண்டு நாசனி=பாண்டு (சோகை) நோயைப் போக் குவது சிறுவாலுளுவை. பயன்.

பாண்டு போசனம்: பாண்டு (சோவை-சோகை) நோய் உள்ளவர் தினையரிசிக் கஞ்சி குடிக்கின் சோபை (பாண்டு) தொடர்பான நோய்கள் விலகும். அ.கு.பா.பாடல்: " திணைமா கபவாதம் தீர்க்குமதன் சாதம்

புனைபித்த மாயினுநற் போகம் - தனைக்கொடுத்து வாதம் போக்கும்; கஞ்சி மாசோபை தோடமிதன் பேதமெலாம் போக்குமெனப் பேசு’

எனவே, தினை பாண்டு போசனம் எனப்பட்டது. பயன்.