பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 65

"பாஞ்சாலை’ எனப்பட்டது. இதன் மலர்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடன் காண்பதற்கு அழகாக இருக்கும். மலர்கள் வாடினால் கிச்சிலி நிறம்போல் தோன்றும். எனவே, அழகிய மலர்த்தோற்றம் உடைய இம்மரத்திற்கு இப்பெயர் தகும். வடிவம்.

பிரியை ஏலக்காய் பலவகையிலும் பிரியமாய்ப் பயன்

படுத்தப்படுவதால் பிரியை எனப்பட்டது. சார்பு.

புணைவி ஆற்றில் விடும் பரிசல் (சிறு ஒடம்) கட்டுவ தற்கு மூங்கில் உதவும், புணை என்பது பரிசலை தெப்பத்தைக் குறிக்கும். புணையாகிய தெப்பம் செய்ய உதவுதலின் மூங்கில் புணைவி எனப்பட்டது. பயன்.

புண்ணியத் தாரு இது முல்லைக்குத் தரப்பட்டது. முல்லை என்பதற்கு ஈகர மூலி' என்னும் ஒரு பொருள் வைத்திய மலை அகராதியில் தரப்பட்டுள்ளது. முல்லைக்குக் கற்பு என்னும் பெயர் உண்டு. கற்புடை மகளிர் மனையில் முல்லையை வளர்ப்பதும் சூடுவதும் உண்டு. எனவே, முல்லைக்குப் புண்ணியத் தாரு” என்னும் பெயர் பொருந்தும். தாரு என்பது மர இனம். கடவுள், கற்பு ஆகிய தொடர்புடைமையின் புண்ணிய முடையதாயிற்று.

சார்பு.

புண் ணியம்: புண் ணியம் என்பதற்குத் துய்மை (Purity) என்னும் பொருள் உண்டு. புளிநாளை என்னும் கொடி, பொதுவாக உடம்பை, சிறப்பாக ஆண்குறியைத் தாய்மை செய்யுமாம்; செம்பைத் தெளிவாகத் தூய்மை (சுத்தி) செய்து பொன்போலாக்குமாம். அ.கு.பா. பாடல்:

புளிநரளை யின் கிழங்கோ பொன்போலச் செம்பைத்

தெளிவாகச் சுத்தியது செய்யும் - வெளியான - மூல முளையறுக்கும்; முந்துசுவைக் கேதுவுமாம்; கோல மடமயிலே கூறு”