பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மர இனப் பெயர்கள்

ஆண்குறியைத் தூய்மை செய்வது பற்றித் தேரன்நூலில் கூறப்பட்டுள்ளது. எனவே, புளி நாளை புண்ணியம் எனப் பட்டது. பயன்.

புத்தகம்: புத்தகம் என்பதைப் புது + அகம் எனப் பிரித்துப் புது வீடு எனப் பொருள் கொள்ள வேண்டும். இக் காலத்திலும் கூரை வீடுகள் மிகுதி. முற்காலத்தில் கூரை வீடுகள் மிகப் பல. தென்னங் கீற்றால் வேயப்பட்ட கூரை மேல், வரகு வைக்கோலைக் கட்டு கட்டாகக் கட்டி வேய்வர். இதனால், மழைநீர் ஒழுகாமை, குளிர்ச்சி, அழகு ஆகிய பயன்கள் உண்டு. எனவே, புத்தகம் (புதுஅகம்) கட்ட உதவும் வரகு புத்தகம் எனப்பட்டது. பயன்.

புலி மரம்: வேங்கை என்பது, வேங்கை மரம், புலி என்னும் பொருள்கள் உடையது. எனவே, சொல் விளை யாட்டாக, வேங்கை மரம், புலி மரம் எனப்பட்டது. மற்றும், வேங்கை மலர்கள் உதிர்ந்திருக்கும் கல்முட்டுகள், காண்பதற்குப் புலி படுத்திருப்பது போல் தோன்றும் என இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இக் கருத்தமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு:

' கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை' (47)

(i=பூ, இரும்புலிக்குருளை - பெரிய புலிக்குட்டி).

மற்றுமொரு கருத்து: வேங்கை மலரைப் பறிக்கச் சென்றவர்கள், பூத்திருக்கும் வேங்கை மரத்தின் தோற்றத் தையும், கீழே கல் முட்டுமேல் கொட்டிக்கிடக்கும் வேங்கை மலரின் அமைப்பையும் பார்த்து அஞ்சிப் புலி-புலி' என்று பெருமுழக்கம் (பூசல்) செய்தனராம். இதனை அகநா னுாற்றில் உள்ள