பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 67

' ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்

புலிபுலி என்னும் பூசல் தோன்ற' - (48-6, 7) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். எனவே, வேங்கை மரம், புலி மரம் எனப்பட்டது.

புழுக்கை=ஈச்சம் பழம் இது. எலி முதலியவற்றின் சிறு புழுக்கைபோல் தோன்றுவதால் இப்பெயர்த்து.

வடிவம்.

பொய் சொன்னான்: சிவனது முடியைப் பார்க்க முடியாத நான்முகன் சார்பாக இருந்து, அவன் சிவன் முடியைப் பார்த்ததாகத் தாழை திருமாலிடம் பொய்ச் சான்று கூறியதான ஒருவகைப் புராண வரலாறு பலரும் அறிந்திருக்கலாம். அதனால், தாழை, பொய் சொன்னான் என்னும் பெயர் பெற்றது. சார்பு.

பூப்பனை = காய்க்கும் பனை பெண்பனை ; பூ உடைய பனை ஆண்பனை. எனவே, ஆண்பனை பூப்பனையாயிற்று. வடிவம்.

பெண் மூங்கில்: குழாயுள்ள மூங்கில் - குழாய் மூங்கில் இப்பெயர் தரப்பட்டுள்ளது. வடிவம்.

பேய்த்துயர் போக்கி = காஞ்சிரம் என்னும் எட்டிமரத் திற்குப் பிசாசு போக்கி என்னும் பெயர் முன்னர்க் கூறப்பட்டுள்ளது. வேப்பமரம் போல், பேயால் துயர் வராமல் காப்பதால், எட்டி பேய்த் துயர் போக்கி எனப் பட்டது. பயன்.

பைத்தியங்காரி = பி த் த த் ைத உண்டாக்குவது புகையிலை. பல கேடுகளுள் பித்தமும் ஒன்றாகும். பாடல். அ.கு.பா :