பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மர இனப் பெயர்கள்

மலை முனி மரம்: பொதிய மலையில் இருக்கும் முனி அகத்தியர். எனவே, அகத்திமரம், சொல் விளையாட்டாக மலைமுனி மரம் எனப்பட்டது.

மன்று = பூவரசு. மன்று (மன்றம்) என்பது, அறம் கூறும் நீதிமன்றம். இது பூவரச மரத்தடியில் ஊர்த் தலைவரால் நடத்தப்படலாம். அதனால் பூவரசு மன்று ஆயிற்று. மற்றும், பூ அரசு (பூமியின் அரசன்) நடத்தும் நீதிமன்றம் என்னும் சொல்விளையாட்டுப் பொருளிலும் இப்பெயர் அமைந்திருக்கலாம்.

மன்னன் மரம் அரச மரம். சொல்விளையாட்டு.

மாகாளி: இப்பெயர் சொல் விளையாட்டாகப் பெரு நன்னாரி என்பதற்குச் சூட்டப்பட்டுள்ளது. பெரு நன்னாரி என்பதை, பெரு-நல்-நாரி எனப் பிரிக்கலாம். காளிக்கு நாரி' என்னும் பெயர் உண்டு, மா = பெரிய. எனவே, பெரு நன்னாரி மாகாளி எனப்பட்டது.

மாதேசி: தேசு = அழகு, ஒளி. எலுமிச்சம்பழம் மிக்க அழகொளி உடைமையால் 'மாதேசி எனப்பட்டது. வடிவம்.

மலைத் திருக்கல் = மலையில் உள்ள மரங்களில் மிளகு முறுக்கிக் கொண்டு ஏறி வளரும், சார்பு.

மலையில் வைரவன் = மலைப் பகுதியில் வைரவக் கடவுள் போல் இருக்கும் பாக்குமரம் இது. சார்பு.

மலைவெட்டு மலையிலிருந்து சந்தனம் வெட்டிக் கொணரப்படுவதால் இப்பெயர்த்து. வெட்டு என்பதற்குப் பணம்-நாணயம் என்ற பொருளும் உண்டு. இ. சா :

தன்னுடைய வெட்டென்றும் -

(பண விடு தூது - 143)