பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 73

சந்தன மரம் பணம் கொடுக்கும் பணப்பயிராகும். அதனா லும் மலை வெட்டு’ எனப்பட்டிருக்கலாம். சார்பு.

மழு வேந்தும் கோபன் = கையில் மழுப் படையேந்தி யுள்ள கோபக்காரன் சிவன். எனவே, இப்பெயர் சொல் விளையாட்டாகச் சிவனார் வேம்பைக் குறிக்கிறது.

மறுமொழி பேசாதான்: சாயாமரம், நிழல் வெளியில் விழாமல் அடக்கியிருப்பதால், மறுமொழி பேசாத அமைதியாளன் போல் உள்ளது. பண்பு.

மனோசிலையை மெழுகாக்கி: மனோசிலை என்னும் ஒருவகைப் பாடாணத்தை, பருத்தி, மெழுகாக்குமாம். பயன்.

மா சுகி = சுகி = சுகத்துக்கு உரியது. பெரிய சுகம் (சுவை) தருவது மிளகாய். எனவே இது மாசுகி எனப் பட்டது. ஒரு சிலர்க்கு உறைப்பு இருந்தாலே உணவு சுவை யாயிருக்கும். பயன். இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள, விலையுயர்ந்த பொருள் எது இருப்பினும் அதை விரும்பா மல் மிளகாய்ப் பொடி கேட்பவர் பலர் உளர்; உறைப்பு இல்லையெனில் உப்பு சப்பு இல்லை என்பர்.

மாதர் அழகி = பெருந்துளசி அழகிய மாதர்போல் இருப்பதால் இப்பெயர்த்து. வடிவம். மாதர் வளர்ப்பது.

மாதர் காய் இது தேங்காய். பெயர்க் காரணம் தெளி வாகப் புரியவில்லைதான். ஆயினும், மாதரின் முலை போன்ற அழகிய உருவ முடைத்தாதலின் தேங்காய் மாதர் காய் எனப்பட்டது என்று கூறலாமல்லவா? வடிவம்.

மாதவன் நிறம்: மாதவன் = திருமால் = அவரது நிலம் கறுப்பு. சடைச்சி என்னும் ஒரு பூடு அந்நிறத்ததாதலின் பண்பாகு பெயராக மாதவன் நிறம் எனப்பட்டது. நிறம்.