பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 75

முகப் பிரியம்: நாரத்தைப் பழம் மோந்து பார்ப்ப தற்குப் பிரியமாய் இருப்பதால் இப்பெயர்த்து. வடிவம். முகத்தல் = மோத்தல்

முக்கண் பிரான்=முக்கண் உடையவன் சிவன். சொல் விளையாட்டாகச் சிவதுளசி இப்பெயர்த்து.

முக்கண் - முக்கண் கனி - முக்கண்ணன் - முக் கண்ணி - இப்பெயர்கள் மூன்று கண்களை உடைய தேங்காய்க்கு உரியனவாம். வடிவம்.

முசல்மூலி. அறுகம் புல்லை முயல் விரும்பித் தின்ப தால் அறுகு இப்பெயர்த்து. சார்பு.

முட்கொடிச்சி: தூதுவளை முள் பொருந்திய கொடி யாகும். வடிவம்.

முதலியார்: தவசி முருங்கை முதலியார் எனப்படும். வீட்டில் ஒரு முருங்கை மரமும் ஓர் எருமை மாடும் இருந் தால் கருப்பு (பஞ்சம்) இல்லை என்பர். முருங்கை முதல் பொருளாக (மூல தனம்போல) உதவுவதால் முதலியார் எனப்பட்டது.

மாயன் மாலை - மாயன் மூலி: மாயன் = திருமால். துளசி திருமாலின் மாலையாகப் பயன்படும் மூலிகை யாதலால் மாயன் மாலை, மாயன் மூலி எனப்பட்டது,

சார்பு.

மாயன் வித்து: வெள்ளரி விதை. அரி என்பதும் மாயன் என்பதும் திருமாலைக் குறிக்கும். எனவே, வெள்ளரி விதை, சொல் விளையாட்டாக மாயன் வித்து எனப்பட்டது.

மாலலங்கல்: மால் அலங்கல் = திருமாலின் மாலை, துளசி, சார்பு.