பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள்

காந்திக்கும் முண்டக நாயகம் எனும் பெயர் ஏற்பட்டது. சார்பு.

முருகன் வாகனம்: இது மயில் காலடி என்னும் கொடி யாகும். அடி, மயில் கால்போல் இருக்குமாதலின் மயில் காலடி எனப்பட்டது. மயில் என்ற சொல் இதில் உள்ளது. மயில் முருகனது ஊர்தி (வாகனம்) ஆதலின், இது முருகன் வாகனம் என்னும் பெயரைச் சொல் விளையாட்டாகப்

பெற்றுள்ளது.

முருகா: அகிலுக்கு இப்பெயர் தரப்பட்டுள்ளது. முருகனுக்கு அகில் புகை மிகவும் உகந்ததாம். இ.சா.

பரிபாடல் - செவ்வேள்:

' கறையில் கார் மழை பொங்கி யன்ன

நறையின் நறும்புகை நனியமர்ந் தோ யே'.(14-19,20)

பரிமேலழகர் உரை 'கார் காலத்து வெண்மேகம் கிளர்ந் தாலன்ன அகில் முதலியவற்றால் புகைத்த நறும்புகையை மிக விரும்பினோய்! "

" திசைநாறிய குன்றமர்ந்து ஆண்டாண்டு ஆவி யுண்ணும் அகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோய் உம்பர் இமைபிறப்ப தேயா மண்டிலம் காணுமா றின்று’ - (17:28-31) பரிமேலழகர் உ ை புகழால் திசையெங்கும் பரந்த குன்றின்கண் மேவி, உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசைக்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகில்புகை அவ்விடந்தோறும் மேலே போதலான் உம்பர் இமையா நின்று நீங்குவார்; ஆதித்த மண்டிலமும் ஆண்டுக் கானும் இயல்புடைத்தன்று’

புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து

சுருதியும் பூவும் சுடருங் கூடி