பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 81

மேக வர்ணனை - மேக வருணை: வர்ணனை - வருணை = நிறமுடையது. மேகம் போல் கருநிறமுடைய அவுரிச்செடி இப்பெயர் பெற்றது. செடி எப்படியிருப்பினும், அவுரிச்செடியிலிருந்து நீலக்கட்டி செய்வது நினைவுகூரத் தக்கது. நிறம்.

மோகினி : மிளகுத் தக்காளி என்னும் வகை, மோகினி போல் கவர்ச்சியா யிருப்பதால் இப்பெயர்த்து. வடிவம்.

யவனப் பிரியம்: அராபியர், உரோமானியர் முதலி யோர் யவனர் எனப்படுவர். இவர்கள் தமிழகத்து மிளகை விரும்பி (பிரியஞ்செய்து) வாங்கிக் கப்பலில் தம் நாட்டுக்குக் கொண்டு செல்வர் என்பது வரலாறு கூறும் பழைய செய்தி யாகும். யவனர் பிரியப்படும் பொருள் ஆதலின் மிளகு யவனப் பிரியம் எனப்பட்டது. சார்பு.

யானைக் கன்று: அத்தி = யானை, பிஞ்சு + கன்று. சொல் விளையாட்டாக, அத்திப்பிஞ்சு யானைக் கன்று

எனப்பட்டது.

யானைத் தலை: அத்தியிலை சொல் விளையாட்டாக இப்பெயர் பெற்றது.

யோகத்தை வளர்க்கு மூலி - யோகம் வளர்த்திடு ஞானி. இவ்விரு பெயர்களும் கஞ்சாவைக் குறிக்கும். யோகஞ் செய்யும் சித்தர்கள் சிலரும் கஞ்சா உட்கொண்ட தால், இது இப்பெயர்களைப் பெற்றது. பயன். சார்பு.

இரசபலம் =இரசம் = சுவை நீர்; பலம்= காய்-பழம். தென்னை இளநீர் உடையதால் இப்பெயர் பெற்றது. பயன்.

இராச கனி: எலுமிச்சம் பழம் கனிகளுக்குள் மிகவும் அழகியதாகவும், தெய்வத்தன்மையுடையதாகவும் கடவுள் பூசனைக்கு உரியதாகவும் இருத்தலின், இராசகனி எனப்