பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம, இனப் பெயர்கள் 83

புளியஞ் சிறு கிளையைப் பிடித்து ஏறினாலும் அச்சமில்லை; அது ஒடியாமல், வடம்போல் - வன்மையான கயிறுபோல் வளைந்து கொடுக்கும். இதனாலும் புளியமரம் வடமாது எனப்பட்டது எனலாம். வடிவம். வடம் = வட்டம். புளிய மரம் வட்டமாயிருக்கும்.

வண்டி புட்பம்: வண்டு தேன் உண்ணும் மலர் வண்டி யாகும். அழகிய மணம் மிகுந்த அசோக மலர்கள் வண்டு களைக் கவர்வன. எனவே, வண்டி புட்பம் என்பது சினையாகு பெயராய் அசோக மரத்திற்கு ஆயிற்று, உடற்

Jn ()).

வண்ணான் குறி: துணி வெளுப்பவர், சேங்கொட்டை யின் உதவியால் துணிக்குக் குறிபோடுவர். அதனால் சேங் கொட்டை இப்பெயர்த்து. சார்பு.

வாசனைக் கன்னி : மிக்க மணமுள்ள சாதிபத்திரி

வாசனைக் கன்னி எனப்பட்டது பொருத்தமே. பண்பு.

வாசி போசனம்: வாசி = குதிரை. இ.சா.

'ஏறின வ் வாசியை' (திருவாலவா - 28-48)

குதிரை உண்ணும் காணப் (கொள்ளுப்) பயறு வாசி போசனம் எனப்பட்டது. சார்பு.

வாத கப சமனி: ஒமத்தில் ஒருவகை அசமதாகம் என்பது. இந்த அசம தாகம், வாயுவையும், கபத்தையும் சமனாக்குவதால் இப்பெயர்த்தாயிற்று. பயன்.

இந்த வாத கப சமணி", என்னும் பெயர் ஒரு திருக் குறளுக்குப் பொருத்தமான பொருள் காண உதவுகிறது.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று' (941)