பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மர இனப் பெயர்கள்

இக்குறளுக்குப் பழைய உரையாசிரியர்களாகிய பரிமே லழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் முதலியோர், உணவும் செயலும் மிகுந்தாலும், குறைந்தாலும், வாதம்-பித்தம் -ஐ (கபம்) ஆகிய மூன்றும் நோய் உண்டாக்கும் என்னும் கருத்து தெரிவித்துள்ளனர். இப்பொருள் தவறு. 'உணவும் செயலும் என்பது தேவை யின்றி வருவிக்கப்பட்டுள்ளது. உடம்பில் வாதம், பித்தம், ஐ மூன்றும் எப்போதும் உண்டு. இவை சமனாய் ஒத்த அளவாய் இருக்கவேண்டும். இம்மூன்றும் அளவினும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும் என்பதே பொருத்தமான பொருள் ஆகும்.

பரிப்பெருமாள் மட்டும் மற்றவர் போலவே உரைகூறி, இறுதியில், "அதுவே அன்றி மற்றுள்ளவை மிகினும், இவை மூன்றும் குறையினும் நோய் ஆகும்” என்று எழுதி, எனது கருத்துக்குக் கைகாட்டியுள்ளார். இதையே தான், வாத கப சமனி என்னும் பெயர் அறிவிக்கிறது. அதாவது, அசமதாகம், வாதத்தையும் கபத்தையும் மிகவும் குறையவும் செய்யாமல் சமப்படுத்தி வைக்கும் என்னும் கருத்தைப் பறைசாற்றி அறிவிக்கிறது. ஈண்டு, சிற்றிஞ்சங்காயைக் குறிக்கும் 'பித்த சமனாக்கி என்னும் பெயர் ஒப்புநோக்கத் தக்கது.

வாத கப விருத்தி: பலாச்சுளையை மிகுதியாக உண்டால், வாத கப நோய்கள் மிகும், குழந்தைகட்கு ஒரு சுளை செரிப்பதுகூட அரிது. பலாச்சுளை சுவையுடையதே தவிர, உடம்புக்கு அளவு மீறும்போது துன்பம் தரும். எனவே, பலா இப்பெயர்த்து. பயன்.

வாத குன்ம நாசினி: வாதம் = வாயுவு, குன்மம் = வயிற்று வலி தொடர்பான நோய். திப்பிலி, வாத குன்ம நோயைப் போக்குவதால் இப்பெயர்த்து பயன்.