பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மர இனப் பெயர்கள்

ஊராரைச் சாராமல் ஒட்டிவிடும் நாலிதழார் நீராரைக் கீரையது நீ.”

பயித்தியம், நீரிழிவு, புண் நீர் ஆகியவற்றை ஆரைக்கீரை ஊரை விட்டே ஒட்டி விடுமாம்,

விரண நீக்கி: விரணம் = புண். நிலக் கடம்பு புண் ஆற்றும். பயன்.

விளக்கம்: இப்பெயரையுடையது சேங்கொட்டை யாகும். சேங்கொட்டை, உடல் நோயைப் போக்கி ஒளி விளக்கம் செய்தலின் விளக்கம் எனப்பட்டது என்று கூறலா மாயினும், இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. சேங்கொட்டைக்கு வண்ணான் குறி' என்னும் பெயர் உள்ளமை முன்பு கூறப்பட்டுள்ளது. இது-இது இன்னின் னார் வீட்டுத் துணி எனச் சேங்கொட்டைக்குறி விளக்குவ தால், சேங்கொட்டை விளக்கம் என்னும் பெயர்த்தாயிற்று என்றும் கூறலாம். பயன். இது, கலங்கிய நீரைத் தெளியச் செய்து விளக்கம் (தூய்மை) செய்வதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

விளிம்பு அறுகு இது, விளிம்பு என்பதற்கு ஒரம், கூர் என்றெல்லாம் பொருள் செய்யலாம். அறுகம்புல் கூரா யிருப்பதால் இப்பெயர்த்து. வடிவம். அறுகு கணபதிக்கு (பிள்ளையாருக்கு) உகந்த தாதலின் கணபதி பத்திரம்’ என்னும் பெயரும் உண்டு என்பது தேரன் வெண்பாவால் தெரிகிறது. சார்பு. பாடல்:

“ அடர்தந்தை பிள்ளைக்கு அணியாத லாலத்

திடமாங் கணபதி பத்ரம்' -

வீட்டில் நெருப்பு: இது அகத்தி. அகத்தி என்பதைச் சொல் விளையாட்டாக அகத்தீ என நீட்டவேண்டும். அகம் = வீடு; தீ = நெருப்பு. எனவே அகத்தி (அகத்தீ)