பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மர இனப் பெயர்கள்

வேசிப் பழம்: வேசி = பரத்தை, விலை மகள். மிகவும் அணி செய்துகொண்டு வேசி பள பளப்பாகக் காணப் படுவாள் ; கண்டாரால் கவரப்படுவாள். அவள்போல, எலுமிச்சம் பழமும் நல்ல அழகொளியுடன் கவர்ச்சியா யிருப்பதால் வேசிப்பழம் எனப்பட்டது. ஒப்புமை.

வேந்தன்: வேந்தன் = அரசன்; எனவே, அரச மரம் சொல் விளையாட்டாக வேந்தன் என்னும் பெயர்பெற்றது.

வேர்க்கட்டை = இது வசம்பு. வசம்பு என்னும் பெயரில் மக்கள் பயன்படுத்துவது, வசம்பு மூலிகையின் வேர்க்கட்டையைத்தான். அதனால் வசம்பு இப் பெயர்த்தா யிற்று. வடிவம்.

வேர்ச் சாற்றில் செம்பு சுத்தி: பேய்க்குமட்டி என்னும் கொடியின் வேர்ச் சாற்றினால் செம்பு என்னும் உலோ கத்தைக் களிம்பு நீக்கித் துய்மை செய்ய முடியுமாம். பயன்.

வேர்ச் சாற்றில் நவலோக சுத்தி: காட்டுக் கொள்ளின் வேர்ச் சாற்றினால், ஒன்பது வகை உலோகங்களையும் தூய்மை செய்து மாற்றலாமாம். பயன்.

வேல்விழி மாது: கண்டங்கத்தரி கூரிய வேல் போல் குத்தும் முள்ளையும் விழிபோன்ற தோற்றத்தையும் உடைமையால் வேல்விழி மாது எனப்பட்டது. வடிவம்.

வேல்விழியாள்: வேலும் விழியும் போன்ற தோற்றம் உடைய கத்துாரி மஞ்சள் வேல் விழியாள் எனப்பட்டது. வடிவம்.

வைணவம்: வைணவக் கடவுளாகிய கண்ணனின் குழல் ஆக்க உதவுவது மூங்கில், எனவே, புல்லாங்குழலாகிய மூங்கிலுக்கும் வைணவத்திற்கும் தொடர்பு உண்டு. அதனால், மூங்கிலரிசி வைணவம் எனப்பட்டது. சார்பு.