பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மர இனப் பெயர்கள்

செந் தீ வண்ணன் செடி = செந் தீ வண்ணன் சிவன். எனவே, சொல் விளையாட்டாக, சிவதுளசிச் செடி இப் பெயர்த்தாயிற்று.

தனுத் திருமரம் = இது மூங்கில், தனு = வில், மூங்கில் வில் செய்ய உதவுவதால் தனுத் திருமரம் எனப்பட்டது. பயன்.

நஞ்சு முறித்தான் = இது அவுரிச்செடி. அவுரி பல வகையான நஞ்சைப் போக்குமாதலின் இப்பெயர்த்தாயிற்று பயன். பாடல் :

அ. கு. பாடம்:

' உரியல் அவுரித் தழைதான் ஒது பதினெண்

அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும்’

" உன்னு விடக்கடியும் ஒடுங்காண்......

அவுரி யிலை தன்னால் அறி. '

நாய் நாக்குப் பூடு: நாயின் நாக்குபோன்ற இலைகளை யுடைய இலைக் கள்ளி நாய் நாக்குப் பூடு எனப்பட்டது. வடிவம்.

நாறு கட்டி = இது பெருங்காயம். நாறுதல் = மணம் வீசுதல். பெருங்காயக் கட்டி மணம் வீசுவதால் நாறு கட்டி எனப்பட்டது. பண்பு,

நெய்யாத ஆடை = பெரும் பன்னாடை நெய்து உருவானதன்று. பன்னாடை என்பதின் இறுதியில் ஆடை என்னும் சொல் இருப்பதால், பன்னாடை, சொல் விளையாட்டாக நெய்யாத ஆடை எனப்பட்டது.

நை மாமிசப் பூண்டு = நை = இகழ்ச்சிக் குறிப்பு. வெங்காயம் மாமிசத்தின் தன்மையுடைய தெனப் பலர்