பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 95

நோன்பு (விரத) நாளில் உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். எனவே, வெங்காயம் நை மாமிசப் பூண்டு எனப்பட்டது. வெங்காயம் காம உணர்வைப் பெருக்கு மாதலின், மாமிசத் தன்மையுடைய தென நோன்பு நாளில் விலக்கப்பட்டுள்ளது. பண்பு.

பசும் பிடிப்புல்=அறுகம் புல் இது. அறுகு பசுமையாக இருக்கும்; கையால் பிடியாகப் பிடித்து அறுக்கப்படும். இதனால் பசும் பிடிப்புல் எனப்பட்டது எனலாம். மற்றும் பசுவுக்கு உணவாகும் புல் என்றும் பொருள் கூறலாம். சார்ட். இங்கே, யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை” என்னும் திருமூலரின் திருமந்திரப் (252) பாடல் பகுதி நினைவு கூரத்தக்கது. மற்றும்,

' விசும்பின் துளிiழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது’ (16)

என்னும் திருக்குறள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. விண்ணி லிருந்து மழைத்துளி வீழாதாயின் பசும் புல்லின் தலையை யும் காணமுடியாதாம். முழுமையான உருவத்துடன் புல் உயரமாக வளராது என்பது மட்டுமன்று; அதன் தலை யையும் - நுனியையும் தரையின்மேல் காணமுடியாதாம். போய்த் தலையைக் காட்டி விட்டு வந்து விடுகிறேன்' என்ற உலக வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

எத்தனை ஆண்டுகள் மழையின்றிக் காயினும், மழைத் துளி விழுந்ததும் அறுகம்புல் மேலே தலைகாட்டும். எங்கள் வீட்டின் எதிரில் தெருவில் கருங்கல்-தார்ப்பாதை போட்டுள்ளனர். அப்படியிருந்தும் எங்கள் தெரு வாயிலில் தார்ப்பாதைக்குமேல் அறுகு தலைகாட்டி வளர்கிறது. செதுக்கச் செதுக்கத் துளிர்க்கிறது. அந்த அளவுக்கு அறுகு வேரூன்றி விடும். இதனால்தான். "ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி” என்று பெரியோர்