பக்கம்:மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மர இனப் பெயர்கள் 97

பார்வதி மரம்: இது ஆத்திமரம். ஆத்தாள் என உலகத் தாயாகிய பார்வதியைக் கூறுவதுண்டு. ஆத்தாள் எனினும் ஆத்தி எனினும் ஒன்றே. எனவே, சொல் விளை யாட்டாக ஆத்திமரம், பார்வதிமரம் எனப்பட்டது.

பால்மரம். கள்ளிச் செடியும் ஆலமரமும் பால் உள்ள மரங்களாம். உடற் கூறு.

பிசாசக் கரும்பு: இது பேய்க் கரும்பு. இது கசக்கும். இது தித்திக்கும் இடம் தாம் அடக்கமாகும் இடமெனப் பட்டினத்தார் இதைக் கையில் வைத்திருந்தார்; இது திரு வொற்றியூரில் தித்தித்தது-என்பர். பிசாசம்=பேய். சொல் விளையாட்டு.

பிரமபத்திரச் செடி. இது புகையிலைச் செடி. பிரமம் முனிவர்.யோகியர்-சித்தர் ஆகியோரையும் குறிக்கும். எனவே, சித்தர்கள், கஞ்சாவைப் போலவே, புகையிலை யையும், உக்காவில் இட்டுப் புகை பிடிக்கலாம். கோரக்கர் பயன் படுத்தியதால் கஞ்சா, கோரக்கர் மூலிகை எனப் பட்டது ஈண்டு நினைவு கூரத்தக்கது. உயர்ந்தவர்கள் சிலரும் பயன்படுத்தும் பத்திரம் (இலை) என்ற பொருளில் புகையிலை, பிரமபத்திரச் செடி எனப்பட்டது. சார்பு. இது பிரமனுக்கு உரிய இலை என்று சிலர் கூறுகின்றனர்; இக் கருத்து எந்த அளவு பொருந்துமோ!

பிரிய தரிசினி வன்னிமரம் பார்ப்பதற்குப் பிரியமான காட்சியாயிருப்பதால், பிரியதரிசினி எனப்பட்டது. வடிவம்.

பிளவை கொல்லி: பக்கப் பிளவை என்னும் புண் கட்டியைப் போக்க இலைக்கள்ளிச் செடி உதவுமாதலின், இது பிளவை கொல்லி எனப்பட்டது. பயன். -

பிள்ளைத் தாய்ச்சிக் கொடி ; இது கெர்ப்பக் கொடி. கெர்ப்பத்தில் உள்ள பிள்ளைக்குத் தாயாயிருப்பவள்