உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

101

நிறையா வயிற்றை நிறைத்திடக் கடலைத்
திறந்து விட்டாலும் திகையுமோ? ஐயா!
வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
பாரப் படிகளும்[1] பட்டிகைப் படிகளும் 285
சாக்ஷிப் படிகளும் சமன்ஸுப் படிகளும்
கணக்கி லடங்காக் கமிஷன் படிகளும்
ஜப்திப் படிகளும் லேலப்[2] படிகளும்
வாறண்டுப் படிகளும் வாசற் படிகளும்
ஏணிப் படிகளும், இப்படி அப்படி 290
எல்லாப் படிகளும் ஏறி இறங்கி,
வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
ஆட[3] ஆளும் நீரோ? ஐயா!
கோர்ட்டு பீஸு குமாஸ்தா பீஸு
கூடிக் காப்பி குடிக்கப் பீஸு 295
வெற்றிலை வாங்கிட வேறொரு பீஸு
வக்கில் பீஸு மகமைப் பீஸு
வக்கா லத்து வகைக்கொரு பீஸு
எழுதப் பீஸு சொல்லப் பீஸு
எழுதிய தாளை எடுகப்பீஸு 300
நிற்கப் பீஸு இருக்கப் பீஸு


  1. 285. பாரப் படி பாரம் எழுதுவதற்குரிய கூலி.
  2. 288. லேலம் -ஏலம்.
  3. 292. 'வாணாளைக் கொடுத்து வாண தீர்த்தம் ஆடுவது'
    என்பது ஒரு நாஞ்சில் நாட்டுப் பழமொழி; வாண தீர்த்தம்
    என்பது பாபநாசம் அருவியிலுள்ள ஒரு தீர்த்தக் கட்டம்.
    இதில் தீர்த்தமாடி வருவது மிகவும் சிரமமான காரியம்.
    அதிகக் கஷ்டப்பட்டு ஒரு காரியத்தை நிறைவேற்றுவது
    இப்பழமொழியின் கருத்து.