உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மருமக்கள்வழி மான்மியம்

ஒருவ ரேனும் உண்டோ? ஐயா!
மூச்சை யடக்கி முக்குளி போட்டுக் 390
கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை
வாரி யெடுத்து மேலே வந்திடும்
முழுக்கா ளியினிடம்[1] முத்தொன் றேனும்
இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்!
படிப்பிலார் தேடும் பற்பல பொருளும் 395
படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்;
மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம்.[2]
ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை;
ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
ஐயா ! ராஜி ஆவதே உத்தமம்! 400
மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில்
வீடுவீ டாயொரு கோடிருந் தாலும்[3]
வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?"
என்று இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி
இறங்கிப் போனார். இக்கதை யெல்லாம் 405
நாலாம் மனைவி நாடகக் காரியின்
மாமன் மகன் ஒரு வக்கீல் குமஸ்தன்
அறிந்து வந்தான். "அண்ணே! அந்த
வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை;
காடு கூப்பிடுது[4] காலம் வரவில்லை; 410


  1. 393. முழுக்காளி - முத்துக் குளிப்பவன்.
  2. 397. மூடர்களால் வக்கீல்கள் செல்வராகிறார்கள் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி (Fools make the lawyers rich).
  3. 402. கோடு - கோர்ட்டு.
  4. 410-411. 'காடு வாவா என்கிறது டு போ போ என்கிறது' என்பது ஒரு பழமொழி.