இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
யாத்திரைப் படலம்
111
கூச்ச மின்றியோர் குச்சுக் கடை போய்க்
காத்துநிற் பவரைக் காசினி கண்டு
155
சீசீ யென்று சிரித்தி டாதோ?
பைத்திய மென்று பழித் திடாதோ?
அன்னை யாக்கிய அமுதினை உண்ணாது
அண்டை வீட்டுக் கூழை யலந்து[1]
வாரி யுண்டு வயிறு நிரப்பும்
160
மதியும் என்ன மதியோ? அம்மா!
நாஞ்சி னாட்டில் நடப்பவை யெல்லாம்
அதிசயம்! அதிசயம்! அதிசயம், அம்மா!
பாவம்! சாமியும் சுவரிற் சாய்ந்து, கண்ணீர்
மாலை மாலையாய் வடித்தங் கிருந்தான்.
165
இந்தச் சமயம், எங்கள்புண் ணியத்தால்,
உலகெலாம் புகழும் உமையொரு பாகத்
தேசிகன்[2] பாற்சிவ தீக்ஷை பெற்றவர்—
நெற்றி நிறைந்த நீற்றுப் பூச்சினர்
கழுத்து நிறைந்த கண்டிகை யணிந்தவர்
170
- ↑ 159. அலந்து-ஆசைப்பட்டு.
- ↑ 167-8. உமையொருபாகத் தேசிகர்: ஆசிரியருக்குச் சிவ
தீக்ஷை செய்து வைத்த பெரியவர். இவரது மடம் சீலை
குண்டத்திலும், தேரூரையடுத்த வாணன்திட்டு முதலிய பல
இடங்களிலும் உண்டு. அங்கு, சைவ போதனை முதலிய
தருமங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ தேசிகரிடம் ஆசிரியர் சிவதீக்ஷை பெற்றுக்கொண்ட
போது பாடிய ஒரு பாடல் வருமாறு:
வேறும் ஒருதுணையான வேண்டுவனோ வேணுவனம்
தேறுமுமை யோர்பாகத் தேசிகனே - கூறுமெமக்கு
எய்யாப் பிறவி இருளகல நீயளித்த
பொய்யா விளக்கிருக்கும் போது.