உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

93

வாயிலின் வந்த மனித ரெல்லாம்,
உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி 130
வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்,
தாட்பொதி[1] யொன்று தலையிற் சுமந்து
வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்[2]
கண்களால் கண்டு கண்டு, நாளும்
நல்லறிவு எய்திட நடைநடை தோறும் 135
இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
செய்து வைத்த கதைதெரி யாதோ?
இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
இவைக ளன்றி வேறு எவையும் உண்டோ?


  1. 132. தாட்பொதி - காகிதக் கட்டு.
  2. 128 - 137. முன்பு அறிவுள்ள நீதிபதி யொருவர் நியாயத் தலத்து வாயிலின் இருபக்கங்களிலும் யாவரும் பார்க்கும்படி இரண்டு சித்திரங்கள் எழுதி வைக்கச் செய்திருந்தார். முதலாவது சித்திரம், எலும்புந் தோலுமாகி, தரித்திர நிலையடைந்த ஒரு மனிதன் உடைந்த ஓடொன்றைக் கையிலேந்தி நிற்பது; இது, கோர்ட்டு வழக்கில் ஈடுபட்டவர் இரு சார்ருள். வழக்குத் தோற்றவர் தம் கைப்பொருள் இழந்து, இரப்பதற்கு நல்ல சட்டி கூடக் கிடைக்காமல், உடைந்த ஓட்டைக் கையில் வைத்திருக்கும் காட்சி. இரண்டாவது சித்திரம், மற்றொரு மனிதன் காகிதப் பொதி யொன்றைத் தலையில் சுமந்து நிற்பது. இது, வழக்கில் வென்றவர், தமது பொருளையெல்லாம் வழக்காடுவதிலே செலவு செய்து பென்ற பிறகு, பணமிழந்து, வழக்குச் சம்பந்தமான தஸ்தாவே ஜுகள் மாத்திரமே மீதியாகி, அவற்றைத் தலையிலே சுமந்து கொண்டு திரியும் காட்சி இவ்வுருவங்களைப் பார்த்த பிறகேனும், வழக்கில் வென்றவர் நிலைமையும் தோற்றவர் நிலைமையும் முடிவில் தரித்திர நிலைமையே என்பதை அறிந்து, கோர்ட்டுக்குப் போய் வீணில் பொருளைப் பாழாக்காதிருக்க வேண்டும் என்ற உண்மையை மக்கள்
    உணர்ந்து ஒழுகும் பொருட்டு ஒரு நீதிபதி அவ்வுருவங்களை
    எழுதி வைக்கச் செய்தார் என்றொரு கதை உண்டு.