இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94
மருமக்கள்வழி மான்மியம்
புத்தியில் லாஇரு பூனைகள் பண்டு
140
வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி[1]
உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
நாம்,
பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ?
145
கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
வரையிலும் ஏறி வழக்குப் பேசி,
அந்திர புரத்து[2] மந்திரம் பிள்ளை
அடியோடு கெட்டது அறிய மாட்டீரோ?
150
வடக்கு வீட்டு மச்சம் பியும்[3] அவர்
மருமக் களுமாய் வருஷம் எட்டாக
மாறி மாறி வாதம் செய்து
யாவையும் போக்கி, இரவா வண்ணம்
இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம்
155
கண்ணால் இன்று காணவில்லையோ?
வேலுப் பிள்ளை வீட்டு நம்பரில்,[4]
ஐந்தாம் சாக்ஷி ஆண்டி[5] அவனை
அழஅழப்படுத்தி,[6] அறுபது ரூபாய்
- ↑ 140-145. இரு பூனைகள் வானரத்திடம் சென்று வழக்குப் பேசிய கதை; இது பஞ்சதந்திரத்தில் உள்ளது.
- ↑ 149. அந்திரபுரம் — நாஞ்சில் நாட்டிலுள்ள ஓரூர்.
- ↑ 151. மச்சம்பி - அத்தான்: அக்காள் கணவன்.
- ↑ 157. வேலுப்பிள்ளை வீட்டு நம்பர் - வேலுப்பிள்ளை
என்பவரின் குடும்பத்தில் ஏற்பட்ட வழக்கு. - ↑ 158. ஆண்டி: ஒருவர் பெயர்.
- ↑ 159. அழ அழப்படுத்தி - மிகவும் கஷ்டப்படுத்தி.