உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோடேறிக் குடிமுடித்த படலம்

95

வாங்கிக் கொண்டு, மேல் வாயிதாத் தோறும்,
'வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்,
முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்;
பானையி லேபத் தரிசி இல்லை,
உப்போ புளியோ ஒன்று மில்லை,
உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை, 165
தொட்டில் கட்டத் துணியு மில்லை,
காந்தி மதிக்குக்[1] கண்டாங்கி யில்லை,
எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை;
இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
கோர்ட்டில் மொழிநான் கொடுக்கவருவேன்?'
என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
முளைய நல்லூர்[2] முதல்பிடிப் பிள்ளை
அண்ணனும் இப்படி யாகக் காரணம்,


  1. 167. காந்திமதி - ஆண்டியின் மனைவி.
  2. 173. முளைய நல்லூர்: இப்பெயருடைய ஊர் தற்பொழுது நாஞ்சில் நாட்டில் அழிந்துவிட்டது. இவ்வூரிலுள்ள ஒருவன் நாஞ்சில் மக்களுக்குப் பெருந்துன்பம் இழைத்துவந்தான் என்று நாஞ்சில் நாட்டில் வழங்கி வரும் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அப்பாடல் வருமாறு:

    தாழக் குடியில் வைரவனும்

    தமிழ்த்தே ரூரில் சந்திரனும்

    கூழம் பெருத்த முளைய நல்லூர்க்

    குறும்பன் அணஞ்ச பெருமாளும்

    நாளை இவர்கள் தலைதெறித்தால்

    நன்றாய் வாழும் நாஞ்சில் நாடு.

    முதல் பிடிப் பிள்ளை — பொக்கிஷதாரன், ஊரின் பொது நிதியைக் காப்பவன்.