பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{8 - மர இனப் செய்திகள் என் உய்த்துணர்வாலும் சொந்தக் கற்பனையா லும் சொந்தப் பட்டறிவாலும் சொல்லப்பட்டிருக்கும் , இது சார்பாகச் சிலருக்குக் கருத்து வேற்றுமை ஏற்படலாம். யான் கூறியனவே முடிந்த முடிடாக மாட்டா. சில செய்திகள் பொருந்தாதன போல் தோன்றின், ஆராய்ச்சியாளர்கள் மேலும் மறுஆய்வு செய்து கருத்து வெளியிடலாம் - அடியேனுக்கும் தெரிவிக்கலாம். 10. அடிக்குறிப்பு இலக்கிய மேற்கோள் தந்தால், நூல் பெயர்-காண்டம்படலம் - பாடல் எண் - முதலியவற்றை, மேற்கோளிலும் பக்கத்தின் அடியிலும் ஒருகுறியிட்டு, அடிக்குறிப்பு என்னும் பெயரால் தருவது உண்டு. இத்தகைய முறை, அச்சுக் கோப்பவர், அச்சுப் பிழை திருத்துபவர், படிப்பவர் ஆகியோருக்கு ஒருவகையில் தொல்லையாயிருப்பதை அறிந்த பட்டறிவு காரணமாக, நூல் பெயர் - காண்டம் - படலம் - மேற்கோளின் பக்கத்திலேயே பாடல் எண் - முதலியவை, அனைவரது இந்நூலில் தரப்பட்டுள்ளன . இத்தகு முறை முயற்சியையும் எளிமையாக்கும். 11. கன்றியறிவிப்பு யான் தஞ்சைத் தொண்டாற்றிக் கொண்டிருந்த ஞான்று, அன்றாட முதன்மைப் பணி முடிந்த பின்னும் - ஒய்வு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் இந்த நாற் கட்டுரைகளை எழுதினேன். விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்திருந்தபோதும் எழுதினேன். இவ்வளவு மட்டுமன்று; துரங்கும்போது தவிர்த்த மற்ற எல்லா நேரங்களிலும் - அதாவது கழிவ றைக்குள் இருந்தபோதும் குளித்தபோதும் உண்டு கொண் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் | பெயர்வைப்புக் கலை 19 17 குந்தபோதும் ത1111f്.. htr: തെr:51.6 it . :) ஆய்ந்து கொண்டிருந்து பின்னர் வந் து எாரதிவிடுவேன். எனவே, இந்நூல் வெளியிட ந்கு முதன்மைக் காரணமா யிருந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கமுகத்திற்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். இதற்கு மேலாக, அடியேனைத் தாமாகவே அழைத்துத் தொகுப்பியல் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் அமர்த்திப் பணி கொண்ட முன்னாள் - முதல்துணைவேந்தர் பெருந்தகை உயர்பெருந்திரு வி. ஐ. சுப்பிரமணியனார் அவர்களின் திருவடிகளைப் பணிந்து என்றுங் குன்றா நன்றி செலுத்துகிறேன். வணக்கம். 2. கற்பு முல்லை கற்பு என்னும் சொல்லுக்கு முல்லை என்று ஒரு பொருள் அகர முதலிகளில் தரப்பட்டுள்ளது. ஒரு முல்லைக் கொடி படர ஒரு தேரையே விட்டுக்கொடுத்த பாரியின் வள்ளன்மை, முல்லையின் அருமை பெருமையை அறிவிக்கும், முல்லைக் கொடிக்கு, மெளவல், ஊதிகை, தளவம், கற்பு, மாகதி என்னும் வேறு பெயர்கள் உண்டு எனத் திவாகர நிகண்டும், ஆசிரிய நிகண்டும் கூறுகின்றன: 'மெளவலும் தளவமும் கற்பும் முல்லை’ to . 1979 கான்பது திவாகர நூற்பா.