பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சுருக்கத் தொகுப்பு: கற்பு முல்லை பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்; பட்டுள்ளவற்றைச் சுருங்கத் தொகுத்து, பிற்காலத்தவராகிய 蠶斷 கொங்கு வேளிர் என்பவர் தம் பெருங்கதை என்னும் நூலின் ! மகத காண்டம் - கண்ணுறு கலக்கம் என்னும் பகுதியில் ; பின்வருமாறு பாடியுள்ளார்; 6 ' உயர்வரை யுப்பால் கதிர்கரக் தொளிப்ப, ஆண்கடன் அகறல். அதுகோன்று ஒழுகுதல் கற்புடை மகளிர் கடனெனக் காட்டி வினைக்கும் பொருட்கு கினைத்துகீத் துறையுகர் 10 எல்லை கருதியது இதுவென மெல்லியற் பனைத்தோள் மகளிர்க்குப் பயிர்வன போல மனைப்பூங் காவின் மருங்கிற் கன்னிய 13 பைக்தார் முல்லை வெண்போது நெகிழ . 35 - - - - - - - - . 6]] for 65) i • * - - - - - - - - - - - - - 36 உழல்புகொண் டறாஅது ஒல்லென் றுணர்தர 5 * 39 ... புன்கண் மாலை போழத் தன்கண் என்பது பாடல் பகுதி. சங்க இலக்கியச் செய்திகள் பெரும்பாலும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். 3-1 கற்பு முல்லை : சுந்தரர் மனந்த சங்கிலியாரின் தந்தை ஞாயிறு கிழவர் என்பவர். இவருடைய பனை வியாரைக் குறிப்பிடுங்கால், கற்பு வளர் கொடியே யனைய மனைவியார்' என்று சேக்கிழார் பெரிய புராணப்பாடல் (3369) ஒன்றில், ! பெயர்வைப்புக் கலை கூறியுள்ளார். முல்லைக் கொடியைக் கற்புக் கொடி என்றே ஆசிரியர் கூறியுள்ள நுட்பம் கருதற்பாற்று. துறையின் 'கற்பு முல்லை' என்னும் கூறும் வெண்பா மாலை இறுதியாக, பெயரால், புறப்பொருள் பாக்களுட ன் இக்கட்டுரையை முடிக்கலாம்: 10. பொதுவியற் படலம் 282. கற்பு முல்லை : " மேவருங் கணவன் தணப்பத் தன்வயின் காவல் கூறினும் அத்துறை யாகும்". (அத்துறை யாகும் = கற்பு முல்லை யாகும்) ' மெளவல் விரியும் மணங்கமழ் மான்மாலைத் தெளவன் முதுகுரம்பைத் தான்தமியள் - செல்வன் இறைகாக்கும் இவ்வுலகின் இற்பிறந்த கல்லாள் கிறைகாப்ப வைகும் கிறை' மற்ற அகர முதலிகள் கற்பு= முல்லை' என்று மட்டும் பொருள் எழுதியிருக்க, சாம்பசிவம் பிள்ளை தம் தமிழ் - ஆங்கில அகராதியில், கற்பு = முல்லைக் கொடி இது கற்புக்கு அறிகுறியாகும்' என்று பொருள் எழுதியுள்ளார். இது அவருடைய பரந்த இலக்கிய-இலக்கணப் படிப்பறிவைக் காட்டுகிறது. முல்லைக்குக் கற்பு என்னும் பெயர், சார்பினால் - தொடர்பினால் வந்ததாகும். இந்தக் கட்டுரையால், தமிழரின் ஒருவகைப் பழைய பழக்க வழக்கம் தெரியவரும்.