பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பேரகராதியிலும் மாமரத்துக்கு உரியனவாகக் கூறப் பட்டுள்ளன. மாமரத்திற்கு இப்பெயர்கள் காலத்தினால் ஏற்பட்டவை. 3. முப்பொருள் தொடர்பு : மாமரத்திற்கு உரிய இப்பெயர்களைக் கொண்டு, மூன்று பொருள்கள் ஒன்றோடொன்று கொண்டுள்ள தொடர்பினை குயில் (கோகிலம்), இளவேனில் அம் முப்பொருள்களாம். இந்த ஆண்டுகளாக அறியலாம். மாமரம், (வசந்தம்) என்பனவே முக்கூட்டுத் தொடர்பு, ஆயிரம்-ஆயிரம் இலக்கியங்களில் சிறப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் அழகைக் கீழே முறையே காணலாம். 3 1 இலக்கிய அகச்சான்று: 3-1-1 இருபதாம் நூற்றாண்டு: இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாவேந்தர் பாரதி தாசனார், தமது பாடல் ஒன்றில், மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை' என்று குறிப்பிட்டுள்ளார். மகாகவி சுப்பிரமணிய இவருடைய முன்னோடியாகிய - =. حمہ - 峻 - - * C) * จุ பாரதியார், புதுச்சேரி நகரின் அருகிலுள்ள ஒரு மாநதோபால அமர்ந்து பாடிய ஒரு குயிலை குயில் பாட்டு' என்னும் அம்மாந் ஒரு மாமரத்தின் மீது அடிப்படையாகக் கொண்டு, ஒரு சிறந்த இலக்கியத்தையே படைத்துள்ளார். தோப்பு குயில் தோப்பு’ என வழங்கப்படுவதும் உண்டு. 3-1 -2 இடைக் காலம் : அ) கொக்கின்மேல் குயில்: கி.பி. பதினான்காம் நூற்றாண்டினராகக் கருதப்படும் வில்லிபுத்துாராம் தம் பாரதம் என்னும் பெருநூலில் இதனை வேடிக்கையாகக் கூறியுள்ளார். மர இனப் மாமரத்திற்கு ஆயிற்று. துயர்வைப்புக் கலை ' கொக்கின் மேல் குயில் கூவும் குளிர் பொழில்' (விராட பருவம் - சேகன் வதைச் சருக்கம் - 59) துன்பது அவரது பாடற் பகுதி - மேலோட்டமாகப் :றார்க்குங்கால், கொக்கு என்னும் பறவையின் மேல் ஏறிக் கோண்டு குயில் கூவுவதாகப் பொருள் கொள் ளத்தோன்றும். ఫ్రో G இருபொருள் நயம் அமைந்துள்ளது. கொக்கு ஒன்பதற்கு மாமரம் என ஒரு பொருள் உண்டு. எனவே, தாமரத்தின் மேல் இருந்து கொண்டு குயில் கூவுவதாக அண்மைப் பொருள் கொள்ள வேண்டும். ல் மாரனுக்கு மகுடம்: இளவேனிலைப் புனைவு செய்ய (வருணிக்க) எண்ணிய வில்லியார், மற்றோரிடத்தில், ' மாரனை மகுடஞ் சூட்ட வந்தது வசந்த காலம்' (ஆதி பருவம் - சம்பவச் சருக்கம் - 91) என்று பாடியுள்ளார். இன்பத்திற்கு உரிய இளவேனிற் காலத்தில், மாரன், (மன்மதன்) மக்கள் மேல் மலர்க்கனை தொடுத்துக் d9; frt f} துண்டுவானாம். அவனுடைய ஐந்து மலர் அம்புகளுள் மாம்பூவும் ஒன்றாகும். எனவே, மா பூத்தலால் மன்மதனுக்கு வேலை உளதாயிற்று. உணர்ச்சியைத் இவ்வாறு மாரனுக்கு மகுடம் சூட்டும்படியாக - மாரனது ஆட்சி நடைபெறும்படியாக வசந்த காலம் வந்ததாம். 3-1-3 மன்மதக் கணை: சினையாகு பெயராக, மன்மதன் கனையாகிய மாம்பூ இதனால், 'மன் மதக் கணை' என்னும் பெயர் (சா.சி.பி.) மாமரத்திற்குத் தரப்பட்டது. இது சார்பால் பெற்ற பெயராயினும், கருத்துத் தொடர்பு கருதி இங்கே கூறப்பட்டுள்ளது.