பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மர இனப் 2-3.1-1 முதல் பொருள்: அறம் என்றால் நீதி: மறை என்றால் மாறானது-எதிர் மறையானது: அற மறை என்றால் நீதிக்கு மாறான செயல் என்பது பொருள். தாயைக் கொல்லும் மாபாவச் செயல் நீதிக்கும் புறம்பானதுதானே! இரண்டாவது பொருளாவது: 2-3-1-2 இரண்டாம் பொருள்: அறம் என்னும் சொல்லுக்கு 'உள்' என்னும் ஒரு பொருள் உண்டு. 'அறம் புறம்' என்றால் உட்புறம் (inner Side) என்று சில அகர முதலிகள் பொருள் தருகின்றன. மறை என்னும் சொல்லுக்கு மறைவு - மறைந்திருப்பது என்னும் பொருள் உண்டு. எனவே, அற மறை என்பதற்கு உள்ளே மறைந்திருப்பது என்பது பொருளாம், உள்ளே மறைந்திருக்கும் பொருள் தீமை செய்வதாய்த் தான் இருக்கும். வாழை மரத்தை வெட்டு வதற்குக் காரணமான குலை உள்ளே மறைந்திருந்து உரிய நேரத்தில் வெளிப்படுதலால், அதற்கு அற மறை” என்னும் பெயர் பொருந்தலாம். இனி மூன்றாவது பொருள் வருமாறு: 2-3-1-3 மூன்றாம் பொருள்: அறம் என்பதற்கு எமன் என்னும் பொருளும் உண்டு. எனவே, கொல்லும் எமன் உள்ளே மறைந்திருக்கும் மரம் வாழைமரம் என்று பொருள் கொள்ளலாம். எமனுக்கு (1) அறம் என்னும் பெயரும் அதன் நேர் வடமொழி வடிவங் களாகிய (2) தருமன் , (3) தரும ராசன், (4) எம தருமன், (5) தருப தேவதை முதலிய பெயர்களும் உண்டு. இலக்கிய அகச்சான்றுகள் வேண்டுமா: 49 து.பயர்வைப்புக் கலை (1) வில்லி பாரதம் - வாரனாவதைச் சருக்கம்: " அறத்தின் மைந்தனுக்கு ஆங்கொரு நாளவைப் புறத்திருந்து புகன்றனன் காவலன் (1.12) (அறத்தின் மைந்தன் = எமனுடைய மகன்; பாண்டவருள் மூத்தவனாகிய தருமன் எமனுக்குப் பிறந்தவன்; அதனால் அவனுக்கும் தருமன் என்ற பெயர் வழங்கப் பட்டது.) (2) பரிபாடல்: " தாமா இருவரும் தருமனும் மடங்கலும்' (3-8) (தருமன் = எமன்; மடங்கல் = அவனேவல் செய்யும் கூற்றம் - பரிமேலழகர் உரை) (3) அப்பர் தேவாரம் - திருக்கடவூர் விாட்டம் ' மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துர்ே மையல் எய்தில் விண்ணிடைத் தரும ராசன் விரும்பினால் விலக்கு வாடிார்? (2) (தரும ராசன் = எமன்) (4) தாயுமானவர் பாடல் - சிற்சுகோதய விலாசம்: " ... தன்முகத்தில் உயிர் வரவழைக்கும் எம தருமனும் பகடு மேய்க்கியாய்' (10) (5) பாரதம் - கச்சுப் பொய்கைச் சருக்கம்: ' தனைப் பயந்தால் தருமதேவதை திருவருளால் ... நினைப்பு மெய்தியத் தம்பியர் தம்மையும் கினைந்தான்' (47) (தனை என்பது, பாண்டவருள் மூத்தவனாகிய தருமனைக் குறிக்கிறது; தனைப் பயந்த நல் தருமதேவதை என்பது, தருமனின் தந்தையாகிய எமனைக் குறிக்கிறது.)