பக்கம்:மர இனப் பெயர்வைப்புக் கலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 கெட்ட பெயர் வந்தது ஏனோ? அவற்றினும் வாழை பெரிய மரமாய் அகழாயிருந்து அழிந்து போவதால் இந்தப் பெயர் ஏற்பட்டதோ அந்தோ வாழையே நீ அளியை! 8. மெய்யறிவு ஆசான்: சிறார்க்குக் கதை சொல்லும் பெரியவர்கள், இறுதியில், வாழாதும் வாழ்ந்து வாழைக் குலை சாய்ந்தார்கள்' என்னும் தொடரை க் கூறுவது உலகியல் எனது இளம் பருவத்தில் எனக்குக் கதை சொன்ன சிலர் எல்லாக் கதைகளின் இறுதியிலும் இந்தத் தொடரைச் சொன்னதுண்டு, " துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று' (22) - என்னும் குறட்கு ஏற்ப, உலகில் இருப்பவரினும் இறந்தவர் களே மிகுதி. இறவாமல் எஞ்சியுள்ளோர்க்குச் சாப்பறை யாகிய நெய்தல் பறை ஒர் எச்சரிக்கை செய்கிறதாம். சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படும் பிணத்துக்கு முன்னால் கொட்டப்படும் நெய்தல் பறை, ஏ மக்களே! சுடுகாடு என ஒன்று உள்ளது; அனைவரும் என்றைக் காயினும் அங்கே போய்த்தான் தீரவேண்டும் என்பது நினைவிருக்கட்டும்! இதோ போகிறவன் தன்னுடன் கொண்டு செல்வதென்ன ! எனவே, பேரவா-பெரும் பற்று புரியாதீர்கள்' என்று கூறுவது நடுங்கும்படி முழங்கப் வேண்டா! கொடுமைகள் கேட்பவர்களின் நெஞ்சு போல், படுகிறதாம். ' எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி நெஞ்சு கடுக்குறு உம் நெய்தல் ஓசை’ (6-70,71) என்பது மனிைமேகலைப் பகுதி. இங்கே நெய்தல் பறை, மெய்யறிவு கொளுத்தும் ஒரு ஞானாசிரியன் போல், செயல்படுகிறது. இந்தப் பணியை வாழையும் செய்கிறதாம்: மர இனப் வாழ்வெல்லாம் S9

பெயர்வைப்புக் கலை

அடைய முடியாத அழகிய வாழை வருபவர்கள் மற்றவர்கள் வாழ்ந்து, இறுதியில், துலை வெட்டப்பட்டதும் சாய்ந்துவிடுவது போல் சாய்ந்து கதையில் விட்டார்களாம் - இறந்து போனார்களாம்; எனவே மக்களினம் வாழ்க்கையில் விழிப்பாயிருக்க வேண்டும் என்பதையே, வாழாதும் வாழ்ந்து வாழைக் குலை சாய்ந்தார்கள்' என்னும் கதையிறுதித் தொடர் உணர்த்து கிறது. எனவே, வாழையை ஒரு மெய்யறிவு ஆசானாக - அன்றோ (கதை கேட்ட ஞானாசிரியனாகக் கூறலாம் தொடர் இப்போது இளமையில் புரியாதிருந்த இந்தத் புரிகிறது). 5. தாயைத் தாங்கிக் காப்பவன் 1. தாயைக் கொல்பவனைப் பார்த்தோம். இனி இங்கே தாயைத் தாங்கிக் காப்பவனைப் பற்றி ஆய்வு செய்யலாம்: " சிதலை தினப்பட்ட ஆலமரத்தை மதலையாய் மற்றதன் விழுன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்”. (197) என்பது நாலடியார்ப் பாடல். செல்லால் அடி(மரம்)அரித்துத் சின்னப்பட்ட ஆலமரத்தை அதன் விழுதுகள் தூண்கள் போல் ஊன்றித் தாங்கி நின்று காத்தல் போல, தந்தையிடம் கிளர்ச்சி ஏற்படின், அவன் மகனது வளர்ச்சியால் அத் தளர்ச்சி மறைக்கப்பட்டுக் குடி உயரும் என்பது பாடலின் கருத்து. தாயாகிய அடிபோன ஆல மரத்தை அதன் பின்னை "கிய விழுது தாங்கிக் காப்பதால், ஈண்டும் சினையாகு